காங்கேசன்துறைமுகத்தில் 4 கிலோ குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையை சேர்ந்த 32 வயதுடைய ஒருவர் இந்தியாவில் இருந்து நாகபட்டினம் துறைமுகம் ஊடாக கப்பல் வழியாக போதைப்பொருளை எடுத்து வந்தவேளை சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் போதைப்பொருள் பொலிஸ் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.