Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை – தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை – தயாராகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்

4 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளது.

அந்தவகையில் தமிழின படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவு நாளான நாளை (18) காலை 6.30 மணிதொடக்கம் 09.30மணிவரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிர் நீத்தவர்களுக்குரிய பிதிர்க்கடன் நிறைவேற்றும் கிரிகைகள் இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் காலை 10.15 மணிக்கு கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்படும்.

10.29 மணிக்கு நினைவொளிக்கு நினைவொளி எழுப்பப்படும். 10.30 க்கு அகவணக்கமும் அதனை தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு சமநேரத்திலே ஒற்றைச் சுடரொளி ஏற்றப்பட்டு இறுதியிலே மலர் வணக்கம் செலுத்தப்படும்.

பொதுச் சுடரேற்றப்பட்டு தமிழினப்படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அனைவரையும் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவருமான அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங்,

முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூருகின்ற 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்விலே உங்களை அன்போடு அழைத்து நிற்கின்றோம்.

தமிழின படுகொலையின் நாளாகிய மே.18 தினத்தில் நாம் அனைவரும் திரளாக ஒன்றுகூடி எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவும் , இந்த அநீதிக்கு நீதி வேண்டியும் மே – 18 ஆம் நாள் இந்த திடலிலே ஒன்று கூட அழைத்து நிற்கின்றோம்.

கொத்து கொத்தாக கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருவோம். நாம் அழிக்கப்பட்டோம் என்கின்ற அந்த விடயத்தை சர்வதேசம் வரை உரத்து சொல்ல இணைந்து கொள்வோம் என தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வாகரை பிரதான வீதியில் மறக்குமா மே – 18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்
செய்திகள்

வாகரை பிரதான வீதியில் மறக்குமா மே – 18 என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும்

May 17, 2025
மட்டு போரதீவுப்பற்றில் வீசிய மினி சூறாவளியில் சேதம் அடைந்த வீடுகள்
செய்திகள்

மட்டு போரதீவுப்பற்றில் வீசிய மினி சூறாவளியில் சேதம் அடைந்த வீடுகள்

May 17, 2025
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் முன்னெடுப்பு
செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் முன்னெடுப்பு

May 17, 2025
உக்ரைன் நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 9 பேர் பலி
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 9 பேர் பலி

May 17, 2025
உயிர்த்த ஞாயிறு தாக்குதளில் சந்தேகத்தின் பெயரில் கைதான 12 பேர் விடுதலை
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதளில் சந்தேகத்தின் பெயரில் கைதான 12 பேர் விடுதலை

May 17, 2025
வவுனியாவில் மின்வயரின் மீது முறிந்து வீழ்ந்த மரம்!
செய்திகள்

வவுனியாவில் மின்வயரின் மீது முறிந்து வீழ்ந்த மரம்!

May 17, 2025

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு