மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி ஒருவர் மது போதையில் வாகனம் செலுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, அவரின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரி கடந்த 16 ஆம் திகதி அம்பாறை காவன்திஸ்ஸ கல்லூரிக்கு அருகில் மதுபோதையில் வாகனம் செலுத்திய போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அம்பாறை வலய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டதோடு, எதிர்வரும் 23 ஆம் திகதி அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் வாழ் தமிழ் அமைப்புகள் மற்றும் பொது மக்களால் இன்று (18) தமிழின அழிப்பின் 16 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டதுடன், கவனயீர்ப்பு பேரணியும் முன்னெடுக்கப்பட்டது!