Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடா நினைவுச்சின்னம் இப்போதும் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்றன என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது; மஹிந்த ராஜபக்ஸ

கனடா நினைவுச்சின்னம் இப்போதும் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்றன என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது; மஹிந்த ராஜபக்ஸ

1 year ago
in செய்திகள்

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும்,சமீபத்திய திறப்பு இப்போதும் கூட பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்றன என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

யுத்தம் வெற்றிகொள்ளப்பட்டு 16வருடங்களாகியுள்ளதை குறிக்கும் விசேட நீண்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

‘எங்கள் தாய் நாடு பிரிவினைவாத பயங்கரவாத ஆக்கிரமிப்பிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளமை உங்களிற்கு தெரியும். இன்று முதல் நாட்டின் ஒவ்வொரு அடிநிலமும் இலங்கையின் இறைமையுள்ள நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டங்களின் அடிப்படையிலேயே ஆளப்படும்”.

நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வை ஆரம்பித்து வைத்து 2009 மே 19ம் திகதி நான் வெளியிடப்பட்ட இந்த பிரகடனத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. சிங்க கொடியின் கீழ் ஒன்றுபட்ட மற்றும் பெருமைமிக்க தேசத்தின் ஜனாதிபதியாகவும்,முப்படை தளபதியாகவும் நான் இந்த பிரகடனத்தை வெளியிட்டேன்.

உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத குழுக்களில் ஒன்றை முற்றிலுமாக அழித்து,ஒவ்வொரு குடிமகனும்,இந்த நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும்,சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும்,சமஉரிமைகளுடனும் வாழக்கூடிய ஒரு தேசத்தை என்பது நம் அனைவராலும் நீண்டகாலமாக காணப்பட்ட ஒரு கனவாகும்.

ஒரு மக்கள் தலைவராக அது எனது தனிப்பட்ட கனவாகவும் காணப்பட்டது.

2005ம் ஆண்டு நான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றவேளை ,விடுதலைப்புலி பயங்கரவாதிகள் தனிநாட்டிற்கான தயாரிப்பில் வடக்குகிழக்கில் ஏற்கனவே நிர்வாக மையங்களை ஏற்படுத்தியிருந்தனர்.

அவர்கள் எமது தாய்நாட்டின் மூன்றிலொரு பகுதியையும் கடற்கரைiயின் ஒரு பகுதியையும் ஏற்கனவே தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தனர்.

வடக்கில் உள்ள எங்களின் சொந்த தமிழ் பேசும் மக்களை அவர்கள் பயமுறுத்தி,பிணைக்கைதிகளாக மிரட்டி பிடித்து, அநியாயமாக வரிவிதித்து, இளைஞர்கள் பெண்களை பாடசாலை மாணவர்களை தங்கள் அணிகளில் வலுக்கட்டாயமாக சேர்த்துக்கொண்டனர்.

அவர்களின் தாக்குதல்கள் நாடு முழுவதும் உள்ள பொருளாதார மையங்கள், மத அரசியல் தலைவர்கள் பொதுமக்களை குறிவைத்தன.

இறுதியில் மக்களின் தாகத்தை தணித்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களிற்கு நீர் வழங்கும் நீர்ப்பாச நீரை கூட அவர்கள் தடுத்துவைத்திருந்தனர். இது அவர்களின் தீவிரவாதத்தின் கொடுரமான அளவை காட்டுகின்றது.

அவர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் அப்பாவி மக்களின் குருதிகளை சிந்தி, இலங்கைக்கான புதிய வரைபடத்தை உருவாக்க திட்டமிட்டிருந்தனர்.

உலகின் வல்லரசுகள் கூட பயங்கரவாதம் குறித்த அச்சத்தில் சிக்குண்டிருந்தவேளை ,நான் விடுதலைப்புலிகளை எதிர்கொள்ள திட்டமிட்டேன் இது மனிதாபிமான நடவடிக்கை.

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும்,சமீபத்திய திறப்பு இப்போதும் கூட பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்கள் நீடிக்கின்ற என்பதை துரதிஸ்டவசமாக நினைவுபடுத்துகின்றது.

பிரம்டன் மேயர் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்ற ஆதாரமற்ற பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

யுத்தம் நடைபெற்றவேளை முப்படை தளபதியாக விளங்கியவன் என்ற அடிப்படையில் அதனை நான் முற்றாக மறுக்கின்றேன்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
Next Post
மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது

மன்னார் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் சடலம் கரை ஒதுங்கியுள்ளது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.