நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தேசிய நீர்வழங்கல் சபையின் கீழ் செயற்படும் 344 நீர் விநியோக திட்டங்களில் 20 திட்டங்களுக்கு நேர அட்டவணை அடிப்படையில் நீர் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த சபையின் அபிவிருத்திப் பிரிவின் பிரதி பொது பணிப்பாளர் அனோஜா களுஆராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி நீர்விநியோக திட்டங்களுக்கான முழு நேர நீர் விநியோகம் நிறுத்தப்பட்டு நேர அட்டவணை அடிப்படையில் நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பல நீர் விநியோக திட்டங்களில் உள்ள நீர் ஆதாரங்களின் நீர்மட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது.
இதேவேளை 11 மாவட்டங்களைச் சேர்ந்த 49 ஆயிரத்து 867 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 63 ஆயிரத்து 111 பேர் குடிநீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.