Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நடைபெற்ற இன அழிப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நடைபெற்ற இன அழிப்பு வாரத்தின் இறுதி நாள் நிகழ்வு

7 hours ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இந்த நாட்டிலே சிங்கள பெரும்பான்மையுடன் வாழ்வதற்கு நாங்கள் ஆசைப்பட்டாலும் விரும்பினாலும் எங்களை இணைத்துவாழ்வதற்கு விருப்பம் இல்லாமல் தமிழ் இனத்தினை இரண்டாம் தர பிரஜைகளாக கணிக்கும் நிலையே உள்ளது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

எங்களுக்காக உயிர்நீர்த்த அத்தனை உறவுகளின் ஆத்மாக்களும் சாந்தியடையவேண்டுமானால் அரசியல் ரீதியாக என்றாலும் ஏனைய விடயங்கள் என்றாலும் ஒன்றாக பயணித்து எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் பாடுபடவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இனஅழிப்பு வாரத்தின் இறுதி நாளான நேற்றைய தினம் (19) மாலை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நடைபெற்றது.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு உணர்வுபூர்வமான நடைபெற்றது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது பிரதான சுடர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரினால் ஏற்றப்பட்டதை தொடர்ந்து அனைவரும் ஈகச்சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தியதுடன், ஆத்மசாந்தி பிரார்த்தனையும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து கடலில் மலர் கொண்டு அஞ்சலி செய்யப்பட்டதுடன், விசேட நினைவேந்தல் உரையும் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த கோவிந்தன் கருணாகரம், மே 18 என்பது இலங்கை மட்டுமல்ல உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு துயரமான, சோகமான, துக்கரமான நாளாகும். இலங்கை சுதந்திரமடைந்த காலமிருந்து தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளைப்பெறுவதற்காக அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் போராடி எமது ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட மே 18ஆம் திகதி, முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் கணிப்பீட்டின் ஒரு லட்சத்து 40 ஆயிரம் தமிழ் மக்களின் உயிரை காவு கொள்ளப்பட்ட தினமே மே 18ஆம் திகதி.

இலங்கையில் தமிழ் மக்கள் இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் இருந்து இரண்டாம் தர பிரஜைகளாகவே நடத்தப்பட்டு வந்ததன் காரணமாகவே தமது உரிமைகளை பெறுவதற்காக நாங்கள் ஆயுத போராட்டத்திற்குள் வலிந்து தள்ளப்பட வேண்டிய ஒரு கட்டாயத்துக்குள் உள்வாங்கப்பட்டோம்.

அந்த வகையில் தான் எமது இனம் தமது உரிமையினை பெறுவதற்காக நீண்ட காலமாக அகிம்சை, ஆயுத ரீதியாக போராடிக் கொண்டுவந்தோம். இலங்கையில் மாறி மாறி ஆண்டு வந்த அரசுகள் தமிழ் மக்களும் இந்த நாட்டின் குடிமக்கள் தமிழ் மக்கள் தான். இந்த நாட்டின் பூர்வ குடிகள் என்ற எண்ணத்தை மாற்றி இதுவொரு சிங்கள தேசம். இது ஒரு பௌத்த நாடு. பௌத்தர்களுக்குதான் முன்னுரிமை. என்ற அடிப்படையிலே மாறி மாறி ஆட்சிசெய்த அரசுகள் எங்களை நடாத்திவந்தார்கள்.

அந்தவகையில்தான் வடகிழக்கில் ஒரு பக்கம் எமது உரிமைகளைப்பெறுவதற்காக போராட்டம் நடைபெற்றுவந்தாலும், தெற்கில் 71ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் 88,89ஆம் காலகட்டங்களில் ஜேவிபி என்னும் ஒரு அரசியல் இயக்கம் ஆட்சியை கவிழ்ப்பதற்காக இரண்டு தடவைகள் போராடியிருந்தார்கள்.

அவர்கள் போராடிய காலப்பகுதியில் தங்களது 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்களையும் தங்களது ஆதரவாளர்களையும் இழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இன்று இந்த நாட்டில் ஒரு அரசியல்மாற்றம் ஏற்பட்டுள்ளது. அன்று ஆயுத ரீதியான கிளர்ச்சியை ஏற்படுத்தி இந்த நாட்டின் ஆட்சியை பிடிப்பதற்கு போராடிய அந்த ஆயுத இயக்கம் தற்போது இந்த நாட்டின் ஆட்சியை பிடித்துள்ளார்கள். ஜனாதிபதி இருக்கின்றார்கள், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை கையில் வைத்திருக்கின்றார்கள்.

தற்போதைய அரசு தமது தோழர்களையும் ஆதரவாளர்களையும் பட்டலந்த என்னும் வதைமுகாமிலே சித்திரவதை செய்து பலபேரை கொன்றொழித்ததாக ஆணைக்குழு ஒன்றின் ஊடாக பாராளுமன்றத்திலும் அறிக்கையினை சமர்பித்து அதற்கான நடவடிக்கையினை எடுப்பதற்கு முன்னிற்கின்றனர்.

ஆனால் வடகிழக்கில் 30வருடத்திற்கும் மேலாக பல இலட்சம் உயிர்களை பறிகொடுத்திருக்கின்றார்கள், அந்த உயிர்களை இந்த நாட்டின் இராணுவம் பலிகொண்டிருக்கின்றது. இறுதியாக முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்து 40ஆயிரம் உயிர்கள் கொல்லப்பட்டுள்ளது. அதற்கு மேலாக உறவினர்கள் மூலமாக இறுதிக்காலப்பகுதியில் சரணடைந்த போராளிகள், பொதுமக்கள் எங்கு என்று தெரியாமல் அவர்களது உறவினர்கள் தத்தளித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இன்று தனது உறுப்பினர்களை, தங்களது ஆதரவாளர்களை பட்டலந்த வதைமுகாம் மூலமாக கொன்றொழித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்கும் இந்த அரசாங்கம், வடகிழக்கில் தமது உரிமைகளை கேட்டு போராடியவர்களுக்கோ படுகொலைசெய்யப்பட்ட பொதுமக்களுக்காகவோ எந்த நியாயத்தினையும் கொடுக்ககூடிய நிலையில் இல்லை.

தங்கள் அரசாங்கமாக பதவிக்குவரும்போதும், ஜனாதிபதி தேர்தல் காலத்திலும் பாராளுமன்ற தேர்தல்காலத்திலும் பல வாக்குறுதிகளை வழங்கி வடகிழக்கில் உள்ள மக்களின் வாக்குகளையும் அளியெடுத்துக்கொண்டார்கள்.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவோம், சிறையில் 30வருடத்திற்கு மேலாக வாழும் அரசியல் கைதிகளை விடுதலைசெய்வோம், புதிய அரசியலமைப்பினை கொண்டுவந்து புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வினை காண்போம் என்றெல்லாம் கூறியவர்கள் இன்று அவையெல்லாம் மறந்துவிட்டு தங்களது கட்சியினருக்கும் உறுப்பினர்களுக்கும் நடந்த அநீதியை மட்டும் தட்டிக்கேட்கும் நிலையே காணப்படுகின்றது.

இதிலிருந்து நாங்கள் உணர்ந்துகொள்வது தமிழ் மக்கள் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லையென்பதை அவர்கள் மறைமுகமாக ஏற்றுக்கொள்கின்றார்கள். அதற்காகத்தான் நாங்கள் தமிழீழமாக எங்களை பிரித்துவிடுங்கள் என்று இந்த நாட்டிலே சிங்கள பெரும்பான்மையுடன் வாழ்வதற்கு நாங்கள் ஆசைப்பட்டாலும் விரும்பினாலும் எங்களை இணைத்துவாழ்வதற்கு விருப்பம் இல்லாமல் தமிழ் இனத்தினை இரண்டாம் தர பிரஜைகளாக கணிக்கும் நிலையே உள்ளது.

தமிழ் மக்களாகிய நாங்கள் ஒன்றாக ஒற்றுமையாக பயணித்து எங்களுக்காக இவ்வாறு உயிர்நீர்த்த அத்தனை உறவுகளின் ஆத்மாக்களும் சாந்தியடையவேண்டுமானால் அரசியல் ரீதியாக என்றாலும் ஏனைய விடயங்கள் என்றாலும் ஒன்றாக பயணித்து எமது உரிமைகளைப்பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் பாடுபடவேண்டும்.

எந்த அரசாங்கமாக இருந்தாலும் சிங்கள அரசுகள் தாங்கள் பௌத்த சிங்களவர்கள் என்பதை அவர்கள் எக்காலத்திலும் மறக்கமாட்டார்கள். தமிழர்களை இரண்டாம் தர பிரஜைகளாகவே பார்ப்பார்கள் என்பதை உணர்ந்து தமிழர்கள் ஒன்றாக இணைந்து பயணிக்கவேண்டும்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தேசிய போர்வீரர் தினத்தையொட்டி முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
செய்திகள்

தேசிய போர்வீரர் தினத்தையொட்டி முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

May 19, 2025
சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களில் 685 பேர் பாதிப்பு
செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களில் 685 பேர் பாதிப்பு

May 19, 2025
195 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களை ஒப்புவித்து சோழன் உலக சாதனை படைத்த மட்டக்களப்பு 2 வயது குழந்தை
செய்திகள்

195 நாடுகளின் தலைநகரங்களின் பெயர்களை ஒப்புவித்து சோழன் உலக சாதனை படைத்த மட்டக்களப்பு 2 வயது குழந்தை

May 19, 2025
ஓட்டமாவடி மத்திய கல்லூரி உயர்தர மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
செய்திகள்

ஓட்டமாவடி மத்திய கல்லூரி உயர்தர மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

May 19, 2025
”முள்ளிவாய்க்கால் ஒரு புண்ணிய பூமி” – உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்திய சிங்கள இளைஞன்
செய்திகள்

”முள்ளிவாய்க்கால் ஒரு புண்ணிய பூமி” – உயிரிழந்த மக்களுக்காக அஞ்சலி செலுத்திய சிங்கள இளைஞன்

May 19, 2025
பாதுகாப்பு தரப்பு முன்னிலையில் கிழக்கு தேற்றாத்தீவு பிரதேசத்தை சேர்ந்த கடற்கொள்ளையரை படம்போட்டு காட்டிய மீனவர்கள்
செய்திகள்

பாதுகாப்பு தரப்பு முன்னிலையில் கிழக்கு தேற்றாத்தீவு பிரதேசத்தை சேர்ந்த கடற்கொள்ளையரை படம்போட்டு காட்டிய மீனவர்கள்

May 19, 2025
Next Post
முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு விளக்கமறியல்

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு விளக்கமறியல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.