கொழும்பு சிறுவர் வைத்தியசாலை டெங்கு மற்றும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் குழந்தை மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக இந்த நோய்கள் பரவுவது மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறிய வைத்தியவர், நுளம்புகள் பெருகும் இடங்களை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் டெங்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் மூட்டு வலி தொடர்ந்தால், அது சிக்குன்குனியாவின் அறிகுறியாக இருக்கலாம் எனவும் வைத்தியர் தீபால் பெரேரா மேலும் சுட்டிக்காட்டினார்.