Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டு அமைப்பாளர் மற்றும் மகளீர் அணி செயலாளர் கட்சியிலிருந்து இராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டு அமைப்பாளர் மற்றும் மகளீர் அணி செயலாளர் கட்சியிலிருந்து இராஜினாமா

1 year ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருள்ராஜ் ஜெயகாந்தன் மற்றும் மாவட்ட மகளீர் அணி செயலாளர் திருமதி ரவீந்திரநாதன் கண்ணகி ஆகிய இருவரும் கட்சியில் இருந்து இன்று (27) இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்தனர்.

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப்ஃ மீடியா கற்கை நெறி நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இந்த இராஜினாமா செய்யும் அறிவிப்பு விடுத்துள்ளனர்.

“ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்து கடந்த 5 வருடங்களாக கட்சிக்காக செயற்பட்டதுடன், உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு கட்சி சார்பில் போட்டியிட்டோம் இதன் போது போனஸ் ஆசனமாக இரண்டு ஆசனம் கிடைத்தது.

இந்த இரண்டு ஆசனங்களை மட்டக்களப்பு நகரில் ஒருவருக்கும் மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் முஸ்லீம் பெண் ஒருவருக்கும் இந்த ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே கட்சிக்காக உழைத்த பலர் இருக்கின்ற நிலையில் ஒரு வருடத்துக்கு ஒருவர் என மாற்றி ஆசன ஒதுக்கீட்டை செய்யுமாறு கட்சியிடம் கோரினோம் கட்சி அதனை செவிமடுக்க வில்லை.

இந்த நிலையில் மாநகர சபை தேர்தலில் 98 வீதம் தமிழ் வாக்குகளை பெற்று கொடுத்த நிலையில் எங்களுக்காக அளிக்கப்பட்ட வாக்குகளை கொண்டு முஸ்லீம் பெண் ஒருவருக்கு போனஸ் ஆசனம் வழங்குவதை வாக்களித்த தமிழ் மக்கள் மிக கேவலமாக குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

எனவே இது தொடர்பாக கட்சியின் கவனத்துக்கு கொண்டு வந்தோம் ஆனால் அவர்கள் அதற்கான தீர்வை தரவில்லை. எனவே இவ்வாறு தீர்வை வழங்காத நிலையில் கட்சியில் இருந்து நானும் மகளீர் அணி செயலாளரும் இராஜினாமா செய்வதகாத தீர்மானம் எடுத்து, இராஜினாமா கடிதத்தை கட்சிக்கு அனுப்பியுள்ளோம்” என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
13 வயதுடைய பாடசாலை மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை

13 வயதுடைய பாடசாலை மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு