Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில், 3,811 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத சொத்துகளை அரசுடைமையாக்குவதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான வூட்லர் தெரிவித்துள்ளார்.

இன்று (31) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், 2024ஆம் ஆண்டில் 1,490 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத சொத்துகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். 2025ஆம் ஆண்டில் மேலும் 1,549 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்ய சட்ட நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதேவேளை, 2026ஆம் ஆண்டில் இதுவரை 772 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத சொத்துகளை அரசுடைமையாக்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ் மொத்தம் 239,384 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 995 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், 378 சந்தேகநபர்களின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 3,287 பேருக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவுகளும் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், கடந்த ஒன்பது மாதங்களில் பாதுகாப்புப் படையினரால் 2,253 கிலோ 834 கிராம் ஹெரோயின், 2,640 கிலோ 695 கிராம் ஐஸ் மற்றும் 293 கிலோ 732 கிராம் கொக்கைன் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் மொத்த சந்தை மதிப்பு 102,116 மில்லியன் ரூபாய் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு