பனை அபிவிருத்திச்சபைத் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் அப்பதவியிலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளார்.
சகாதேவனுக்கு எதிராக பெறப்பட்ட பல முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்தப் பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடிதத்தில் சகாதேவனுக்கு எதிரான முறைப்பாடுகளை நியாயமான முறையில் விசாரிப்பதற்காக பனை அபிவிருத்திச்சபை தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர் பதவி ஆகியவற்றிலிருந்து அவர் தற்காலிகமாக அகற்றப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவைப் பெருந்தோட்டங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த விஜயரட்ண கடிதமூலம் பிறப்பித்துள்ளார்.