பிரமிட் வியாபாரத்தில் ஈடுபடும் நபர்கள் அந்த பிரமிட் வியாபாரத்தினை பிரபலப்படுத்துவதற்காக மத சடங்குகளை கூட ஏற்பாடு செய்வதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று (13) இரவு இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சமூக அடையாளமாக மாறியுள்ள இந்த பிரமிட் திட்டத்தை தடுக்க தற்போதுள்ள சட்டங்களை அதிகபட்சமாக அமுல்படுத்துவதுடன், தேவைப்பட்டால் சட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான கடத்தல்களை தடை செய்வதை விட அல்லது தண்டிப்பதை விட, இந்த கடத்தல்களை சமூகத்திற்கு தெரியப்படுத்துவதுடன், அதில் சிக்காமல் இருக்க பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார்.