அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக கனடா இணைந்தால் தமது Golden Dome ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பில் இலவசமாக இணைய முடியுமென அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கனடா இதற்கு இணங்காதபட்சத்தில் குறித்த கட்டமைப்பில் இணைவதற்கு 61 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கில் அமெரிக்காவினால் கடந்த வாரம் Golden Dome ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பு தொடர்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
குறித்த பாதுகாப்பு கட்டமைப்பில் இணைவதற்கு கனடா விருப்பம் தெரிவித்திருந்த நிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.