கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட வீட்டுத்திட்டங்கள் உடனடியாக மீள ஆரம்பிக்கப்படும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
“தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையை ஸ்தாபித்ததன் முக்கிய நோக்கம் இந்த நாட்டின் வறிய மக்களுக்கு வீடு ஒன்றைக் கட்டிக் கொடுப்பதாகும். நாட்டில் இன்னும் பல வீடற்ற குடும்பங்கள் உள்ளன. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் செவன நிதியத்தின் கீழ் மிகவும் வறிய குடும்பங்களுக்கு வீடமைப்பு உதவிகள் வழங்கப்படுகின்றன.
மேலும், அரச ஊழியர்களுக்கு ‘சேவாபிமானி’என்ற கடன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர்களுக்கு 14% வட்டியில் 10 இலட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
‘விசிறி கடன்’என்ற மற்றொரு திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள அரசு சாரா ஊழியர்களுக்கு 12% கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்கள் மூலம் 10 பில்லியனுக்கும் அதிகமான தொகையை மக்களுக்கு வழங்கியுள்ளோம். ஆனால் மக்களுக்கு நாங்கள் கடனாகக் கொடுத்த சுமார் 5 பில்லியன் பணத்தைத் திரும்பக் கொடுக்கவில்லை. தற்போது அந்த பணத்தை மீட்கும் பணியை துரிதப்படுத்தி இருக்கிறோம் என சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்தார்.