சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்வெளி அடிப்படையிலான இந்திய ஆய்வகமான ஆதித்யா-எல்1 (AdityaL1) ஏவுவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தயாராகி வருகிறது. பெங்களூரு யூ ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து (URSC) இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆதித்யா-எல்1 சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்வெளி அடிப்படையிலான இந்தியப்பணியாகும். பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள சூரியன் பூமி அமைப்பின் லாக்ரேஞ்ச் புள்ளி 1 (L1) ஐச் சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் விண்கலம் வைக்கப்படும்.
எல்1 புள்ளியைச் சுற்றியுள்ள ஒளிவட்டப் பாதையில் வைக்கப்படும் செயற்கைக்கோள், சூரியனை எந்த மறைவும் இல்லாமல் தொடர்ந்து பார்ப்பதன் முக்கிய நன்மையைக் கொண்டுள்ளது. இது சூரிய செயல்பாடுகள் மற்றும் விண்வெளி வானிலையில் அதன் தாக்கத்தை
உண்மையான நேரத்தில் கவனிப்பதில் அதிக நன்மையை வழங்கும்.