Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொதுமக்களுக்கும் சட்டவாக்கத்துக்கும் இடையிலான தொலைவைக் குறைக்க நடவடிக்கை

பொதுமக்களுக்கும் சட்டவாக்கத்துக்கும் இடையிலான தொலைவைக் குறைக்க நடவடிக்கை

1 year ago
in செய்திகள்

திறந்த அரச பங்குடமையின் அங்கத்துவத்தை செயற்படுத்தி பொதுமக்களுக்கும் சட்டவாக்கத்துக்கும் இடையிலான தொலைவைக் குறைப்பதற்கு விரிவாகப் பணியாற்றுவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் கவனம் செலுத்தப்பட்டது.

ஒன்றியத்தின் இணைத்தலைவர்களான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் (வைத்தியர்) கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் அண்மையில் (06) ஒன்றியம் கூடிய போதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, மிகவும் வினைத்திறனாகப் பணியாற்றுவதற்குத் திறந்த அரச பங்குடமையின் அங்கத்துவத்தை செயற்படுத்துவதற்கு ஒன்றியத்தினால் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அதற்கமைய, டிரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் மற்றும் சர்வோதய ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கும் அவர்களின் அனுவபம் மற்றும் அறிவை அடிப்படையாகக் கொண்டு திறந்த அரச பங்குடமையின் அங்கத்துவத்தை செயற்படுத்துவதற்குத் தேவையான அடிப்படை புரிதலைப் பெற்றுக்கொள்வதற்கும் ஒன்றியத்தின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகளை மிகவும் வினைத்திறனாக முன்னெடுப்பதற்குத் தேவையான கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இங்கு ஒன்பதாவது பாராளுமன்றத்தில் செயற்பட்ட திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பிலும் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அத்துடன், ஒன்றியத்தினால் விரைவாக மேற்கொள்ளக்கூடிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்கமைய, உள்ளூராட்சி மன்றங்களில் குழுக்களை நியமிக்கும் போது சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தவர்களை நியமிப்பதற்குக் காணப்படும் சட்டரீதியான ஏற்பாடுகள் பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளை அறிவுறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

அது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி தலைமையில் உப குழுவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டது.

மேலும், ஒன்றியத்தினால் மேற்கொள்ள எதிர்பார்க்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் தேவையான பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிறுவனங்களுடன் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த ஒன்றியத்தின் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், ஒன்றியத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்
செய்திகள்

மட்டக்களப்பு, அம்பாறையில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்

July 23, 2026
கனடாவில் இலங்கை வம்சாவளி மருத்துவர் கைது ; குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்க வழக்கு பரபரப்பு
உலக செய்திகள்

கனடாவில் இலங்கை வம்சாவளி மருத்துவர் கைது ; குழந்தைகள் தொடர்பான பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்க வழக்கு பரபரப்பு

July 23, 2026
இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் கைது

July 23, 2026
மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
Next Post
ஊழல் குற்றச்சாட்டில் கைதான லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டில் கைதான லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் பிணையில் விடுதலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.