Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 110 பேரின் உடல்கள் மீட்பு; குஜராத்தின் முன்னாள் முதலமைச்சரும் விமானத்தில் இருந்ததாக தகவல்

அகமதாபாத் விமான விபத்தில் இதுவரை 110 பேரின் உடல்கள் மீட்பு; குஜராத்தின் முன்னாள் முதலமைச்சரும் விமானத்தில் இருந்ததாக தகவல்

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 13.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட, ஏர் இந்தியாவின் AI171 பயணிகள் விமானம், சில வினாடிகளிலேயே அருகில் விழுந்து விபத்துக்குள்ளானது.

242 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் 787 ரக ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே 15 கி.மீ தொலைவில் உள்ள மேகானி நகரில் விழுந்து நொறுங்கியது. விபத்தை தொடர்ந்து சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இதுவரை 110 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விமானத்தில் இருந்தவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஒருவர் கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்ச்சுக்கலை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானத்தில் குஜராத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி பயணித்ததாகவும், அவர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இதில் 14 பேர் குழந்தைகள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது மோதியதில், கட்டடத்தில் இருந்த மாணவர்களும், மருத்துவர்களும் பலத்த காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். இதில் பலபேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து அமைச்சர் ஆகியோர் அகமதாபாத் செல்ல பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். பயணிகள் குறித்த தகவலுக்கு 1800 5691 444 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விமான நிலையத்திற்கு அருகே நடந்த எயர் இந்தியா விமான விபத்தில், குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி விமானத்தில் பயணித்ததாக டிவி9 குஜராத்தி அறிக்கை தெரிவித்துள்ளது.

Tags: BattinaathamnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை விண்ணப்பத் தகவல் திருத்தம்; ஓகஸ்ட் 3 வரை அவகாசம்

July 23, 2026
மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றம் எதிரொலி; கச்சா எண்ணெய் விலை 100 டொலரைக் கடந்தது!

July 23, 2026
உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு வழக்கு; கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு ஓகஸ்ட் 3 வரை ஒத்திவைப்பு!

July 23, 2026
வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!
செய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

July 23, 2026
சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
Next Post
சட்டவிரோத துப்பாக்கிச்சூட்டு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டதாக முன்னாள் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரி வாக்குமூலம்

சட்டவிரோத துப்பாக்கிச்சூட்டு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டதாக முன்னாள் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரி வாக்குமூலம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு