அரச பேருந்து சாரதிகளைப் போலவே, தனியார் பேருந்து சாரதிகளுக்கும் ஓய்வூதியம் வழங்கும் சமூகப் பாதுகாப்பு முறையை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது கட்டாயமாக்கப்படும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.