தமிழ் மக்கள் அமைதியாக பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பகுதிக்குள் குருந்தூர்மலையில் ‘குருந்தி விகாரை’ பௌத்த பிக்கு நுழைந்து தமிழர்களின் பொங்கல் வழிபாட்டை சீர்குலைக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தொல்பொருள் திணைக்களத்தின் கடுமையான விதிகளின்படி, குருந்தூர் மலையில் இன்று (18) பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
இன்று காலை முல்லைத்தீவு – குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் நிகழ்வு சுமூகமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தவேளை அங்கு பெளத்த குருமார்களினால் இந்த குழப்பநிலை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம் இன்றைய தினம் குருந்தூர் மலை ஆதிசிவன் பொங்கல் நிகழ்வின் போதே புதிதாக அமைக்கப்பட்ட விகாரைக்கும் அதே நாளான இன்று பூசைசெய்ய போவதாக தெரிவித்து ஐநூறுக்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் மற்றும் பௌத்த பிக்குகள் வரவழைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.