கண்டியில் உள்ள விடுதியொன்றில் கைவிடப்பட்ட பையில் சிறைச்சாலைக்குச் சொந்தமான ஒரு ஜோடி கைவிலங்குகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த கைவிலங்குகளில் சிறைச்சாலைத் திணைக்களத்தின் ஆங்கில எண்கள் – 3000 மற்றும் 150843 எழுதப்பட்டிருப்பதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள விடுமுறை விடுதியில் கைவிடப்பட்ட பையில் இந்த ஜோடி கைவிலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








