கூகுள் பயனர்களுக்கு நிறுவனம் ஒரு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. பழைய குரோமை பயன்படுத்துவர்கள் உடனடியாக அப்டேட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆன்லைனில் ஆபத்து எப்படி வரும், எப்போது வரும் என்றே கணிக்க முடியாத காலம் இது. இந்த சூழலில், இந்திய அரசு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது இணைய பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பெரும்பாலான இந்திய பயனர்கள் கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பிரவுசரில் தான் தீங்கிழைக்கும் பக்ஸ் கண்டறியப்பட்டுள்ளதாக அரசின் கீழ் இயங்கும் CERT-In எனப்படும் இந்திய கணினி அவசரகால உதவிக் குழு தெரிவித்துள்ளது.
சேமிப்பு, திரைப் பதிவு, ஃபைல் மேனேஜர், உள்நுழைவு, பிடிஎஃப், ஆட்டோ ஃபில் ஆகிய வசதிகளை நாம் பயன்படுத்தும் போது, அதனை ஹேக்கர்கள் அணுக அனுமதிக்கும் சில பக்ஸ் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
“கூகுள் குரோம் உலாவியில் பல பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இலக்கு வைக்கப்பட்ட கணினியில் வைரஸ் பாதிப்புகளை பயன்படுத்திக்கொண்டு, தன்னிச்சையான குறியீட்டை இயக்க ஹேக்கர்களால் முடியும்,” என்று இக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
பயனர்களின் தனியுரிமை தகவல்களைத் திருட, இலக்கு வைக்கப்பட்ட கணினியில் மால்வேர் போன்ற வைரஸ்களை உலாவவிட்டு, கணினியில் உள்ள தகவல்களைத் திருடுவதே இந்த பக்ஸின் வேலையாக இருக்கும் என்று அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்து தங்கள் பிரவுசரின் புதிய பதிப்பில் தீர்வு காணப்பட்டுள்ளதாகக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட பதிப்பைப் புதுப்பித்துக்கொள்ளும்படி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
பாதிப்புக்குள்ளான கூகுள் குரோம் பிரவுசர் பதிப்புகள்
Google Chrome versions prior to 115.0.5790.170 for Linux and Mac
Google Chrome versions prior to 115.0.5790.170/.171 for Windows
அவசரகால கணினி உதவிக்குழு பிரவுசரை உடனடியாக அப்டேட் செய்யும்படி கூறியுள்ளது. கூகுள் நிறுவனமும், இதுபோன்ற தீங்கிழைக்கும் பக்ஸில் இருந்து தங்களின் பிரவுசரை பாதுகாக்க தொடர்ந்து அப்டேட்டுகள் வழங்கப்படும் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Google Chrome உலாவியைப் புதுப்பிக்க:
மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் மெனுவைக் கிளிக் செய்யவும்
‘உதவி’ (Help) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ‘About Google Chrome’ என்பதைக் கிளிக் செய்யவும்.
இப்போது, கூகுள் குரோம் தானாகவே புதுப்பிப்புகளை சரிபார்த்து நிறுவும். உங்கள் பிரவுசர் புதுப்பித்த நிலையில் இருந்தால், “கூகுள் குரோம் புதுப்பித்த நிலையில் உள்ளது” என்று ஒரு செய்தி திரையில் காட்டப்படும் எப்போதும் ஆட்டோமேடிக் அப்டேட்டை ஆக்டிவேட் செய்து வைத்திருப்பது நல்லதாகும்.
CERT-In கண்டறிந்த தீங்கிழைக்கும் பக்ஸ்கள் :
CVE-2023-4068
CVE-2023-4069
CVE-2023-4070
CVE-2023-4071
CVE-2023-4072
CVE-2023-4073
OVE-2023-4074
CVE-2023-4075
CVE-2023-4076
CVE-2023-4077
CVE-2023-4078
இங்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த பக்ஸ் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பக்ஸ் உங்கள் ஸ்மார்ட்போனில் இருப்பதாக தெரிந்தால் உடனடியாக உங்களில் ஸ்மார்போனில் பயன்பாட்டில் உள்ள கூகுள் குரோமை அப்டேட் செய்யவும்.