நிரந்தர நியமனம் வழங்கப்படாத மின்சாரத்துறை ஊழியர்கள் உடனடியாக நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரிபெரும் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.நாளை திங்கட்கிழமை
இந்த போராட்டத்தை இவர்கள் முன்னெடுக்கவுள்ளனர்.
மின்சாரத்துறையில் 6 வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் 912 ஊழியர்களுக்கு இன்னமும் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.கடந்த இரண்டு வருடங்களாக தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டுமென இவர்கள் போராடிவருதுடன், அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை சந்திப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால், அமைச்சரை சந்திப்பதற்கான வாய்ப்புகள் இதுவரை கிடைக்கவில்லை.பலமுறை அமைச்சின் செயலாளர் மற்றும் உரிய அதிகாரிகளை சந்தித்து
தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி இவர்கள் கோரிக்கைகளை விடுத்திருந்த போதிலும் அதற்கு எவ்விதபதில்களும் வழங்கப்படவில்லை.
நிரந்தர நியமனம் வழங்கப்படாமையால் காப்புறுதித்திட்டத்தில் கூட இவர்கள் உள்வாங்கப்படவில்லை.
நாளை திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட நிரந்தர நியமனம் வழங்கப்படாத மின்சாரத்துறை ஊழியர் ஒருவர், எமக்கு தினசரி சம்பளம்தான்
வழங்கப்படுகிறது.
1710 ரூபா தான் எமக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது.நாட்டில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால் இந்த சம்பள முறையில் எமக்கு பயணிக்க முடியாது. காப்புறுதித் திட்டம் இல்லாமையால் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளோம்.
பணிநேரத்தில் ஒரு உழியர் உயிரிழந்தால் அல்லது காயமுற்றால் எமக்கு எவ்வித பாதுகாப்பு உத்தரவாதமும்
இல்லை.“-என்றார்.கொழும்பில் அமைந்துள்ள மின்சார சபையின் தலைமையகத்துக்கு முன்னால் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது.