Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச லயன்ஸ் கழக மாநாட்டில் மட்டக்களப்பை சேர்ந்த க.லோகேந்திரன் லயன்ஸ் கழக ஆளுநராக தெரிவு

அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச லயன்ஸ் கழக மாநாட்டில் மட்டக்களப்பை சேர்ந்த க.லோகேந்திரன் லயன்ஸ் கழக ஆளுநராக தெரிவு

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச லயன்ஸ் கழக மாநாட்டில் மட்டக்களப்பு வாழைச்சேனையைச் சேர்ந்த க.லோகேந்திரன் இலங்கையின் லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 டி 10 இற்கான கௌரவ ஆளுநராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவரை கௌரவிக்கும் முகமான வரவேற்ப்பு நிகழ்வு வாழைச்சேனையில் இடம்பெற்றது. கட்டு நாயக்கா விமானதளத்தில் நடைபெற்ற வரவேற்பை தொடர்ந்து அவர் மட்டக்களப்பு நோக்கி வரும் வழியில் இவ் நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வினை வாழைச்சேனை லயன்ஸ் கழக உறுப்பினர்கள்,அவருடன் கல்வி கற்ற பள்ளி தோழர்கள் மற்றும் சமூக சேவைகள் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது அவர் மலர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தியும் வரவேற்கப்பட்டதுடன் கறுவாக்கேணி ஆலகண்டி சிவன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாட்டு நிகழ்வுகளிலும் பங்குபற்றியிருந்தார்.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கடந்த 17.07.2025 அன்று 200 இற்கு மேற்பட்ட நாடுகள் பங்குபற்றிய 107 ஆவது சர்வதேச லயன்ஸ் கழக மாநாட்டில் இலங்கை சார்பில் லயன் க.லோகேந்திரன் பங்கு பற்றியிருந்தார்.

இதன்போது அவர் 306 டி 10 இற்குரிய ஆளுநராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 306 டி வலயத்திற்குள் இலங்கையில் நுவரெலியா, பதுளை, மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய 05 மாவட்டங்களை உள்ளடக்கிய வலயமாக காணப்படுகிறது.

லயனஸ் கழக வரலாற்றில் மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மாவட்டங்களில் லயனஸ் கழகங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டு 52 வருடங்கள் கடந்த நிலையில் சர்வதேச ரீதியில் இவ் பதவிக்கு முதற் தடவையாக இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை கற்றதுடன் உயர் கல்வியை வாழைச்சேனை இந்துக்கல்லூரியிலும் அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திலும் கல்வி பயின்றிருந்தார்.

இலங்கை புற்று நோய் சங்கத்தின் அங்கத்துவராகவும், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு உறுப்பினர் மற்றும் வாழைச்சேனை குட் வின் வைத்தியசாலையின் ஸ்தாபகருமாக செயற்பட்டு வருகின்றார்.

அத்துடன் மாவட்டம் கடந்து பல்வேறுபட்ட மனிதநேய மிக்க சமூக செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்.

இதனை முன்னிட்டும் லயன்ஸ் கழகத்தினூடாக மக்களுக்கு ஆற்றிய பல்வேறுபட்ட சேவையை பாராட்டி இப் பதவிக்கு சர்வதேச ரீதியில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன்,மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தினராலும் அமோக வரவேற்பு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை
செய்திகள்

தகுதியற்ற சாரதி பயிற்றுவிப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பொலிஸ் எச்சரிக்கை

June 24, 2026
வவுனியா மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி உப தவிசாளர் ஞா. கிசோர் பதவி நீக்கம்
செய்திகள்

வவுனியா மேயர் சு. காண்டீபன் மற்றும் சாவகச்சேரி உப தவிசாளர் ஞா. கிசோர் பதவி நீக்கம்

June 24, 2026
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுங்கள்; ஜெர்மன் துணை தூதுவரிடம் மட்டு ஊடக அமையம் கோரிக்கை!
செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுங்கள்; ஜெர்மன் துணை தூதுவரிடம் மட்டு ஊடக அமையம் கோரிக்கை!

June 24, 2026
மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை
செய்திகள்

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறும் அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை

June 24, 2026
கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை: அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை: அமைச்சர் சந்திரசேகர்

June 24, 2026
இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!
செய்திகள்

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 இலட்சத்தைத் தாண்டியது!

June 24, 2026
Next Post
உத்தேச புதிய கல்வி சீர்திருத்த விவாதம் எதிர்வரும் 24 ஆம் திகதி விவாதத்திக்க தீர்மானம்

உத்தேச புதிய கல்வி சீர்திருத்த விவாதம் எதிர்வரும் 24 ஆம் திகதி விவாதத்திக்க தீர்மானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு