உலக அளவில் கவனத்தை ஈர்த்த சந்திரயான்-3 விண்கலம் நேற்று 23 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.
சந்திரனின் தென் துருவப்பகுதியில் முதன்முதலில் தரையிறக்கத்தை மேற்கொண்ட வரலாற்றுப் பெருமையையுடன் இந்தியா முதன்முதலில் சந்திரனில் தனது நடவடிக்கையின் ஆரம்பத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
இந்தியாவின் உள்ளுர் நேரப்படி மாலை ஆறு மணிக்குப் பின்னர் இந்த மெதுவாக தரையிறங்கம் வெற்றிகரமாக இடம்பெற்ற பின்னர் தென்னாபிரிக்காவில் இருந்து இந்த செய்தியை இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி உலகுக்கு அறிவித்திருந்தார்.
சந்திரனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் தரையிறங்கு கலம் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியமை இந்தியாவின் விண்வெளித்திட்டத்தில் புதிய பதிவை ஏற்படுத்தியுள்ளது.
Chandrayaan-3 Mission:
‘India🇮🇳,
I reached my destination
and you too!’
: Chandrayaan-3
Chandrayaan-3 has successfully
soft-landed on the moon 🌖!.
Congratulations, India🇮🇳!#Chandrayaan_3#Ch3
— ISRO (@isro) August 23, 2023
திட்டமிட்ட படி இந்த தரையிறக்கம் இடம்பெற்றதும் பெங்களுருவில் உள்ள சந்திரயான்-3 திட்டத்தின் கட்டுப்பாட்டு அறையில் மகிழ்ச்சியும் ஆரவாரமும் நிலவியது.
முன்னதாக தரையிறக்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட இடத்திற்கு திட்டமிட்டபடி சென்ற இந்தக்கலம் அதன்பின்னர் கட்டுப்பாட்டு அறையில் வழங்கப்பட்ட உத்தரவுடன் தரையிறங்கியுள்ளது.