Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியாவில் தங்க அனுமதி உண்டு, ஆனால் நீண்டகால விசா இல்லை

இந்தியாவில் தங்க அனுமதி உண்டு, ஆனால் நீண்டகால விசா இல்லை

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது பலர் அங்கிருந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் மீது எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று மத்திய அரசு கடந்த வாரம் தான் அறிவித்திருந்தது. இருப்பினும், இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியாவில் நீண்ட கால விசா கோரி விண்ணப்பிக்க முடியாதாம். இது தொடர்பாகச் சில முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் பல ஆண்டுகள் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் இருந்து பல ஆயிரம் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்தார்கள். போர்ச் சூழல் காரணமாக வேறு வழியில்லாமல் அவர்கள் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி சட்டவிரோதமாகத் தமிழகம் வந்தடைந்தனர்.

இருப்பினும், அவர்கள் அகதிகள் முகாமிலேயே தங்க வேண்டி இருந்தது. மேலும், அவர்கள் சட்டவிரோதமாக நாட்டில் நுழைந்தவர்கள் என்பதால் சட்டவிரோதக் குடியேறிகளாகவே கருதப்பட்டனர். ஆனால், இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர்களைச் சட்டப்பூர்வ இந்தியக் குடிமக்களாகக் கருத வேண்டும் என்றும் தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது 2015 ஜனவரி 9ம் தேதிக்கு முன்பு இலங்கையில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாகப் பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருத மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சட்டப்பூர்வமாகத் தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

இது இலங்கைத் தமிழர்களுக்கு மிக முக்கியமான ஒரு அறிவிப்பாகப் பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் தான் இப்போது இன்னொரு முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது சட்டவிரோதமாக இந்தியா வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்ற போதிலும் ஆவணமற்ற இலங்கைத் தமிழ் அகதிகள், LTV நீண்ட கால விசா கோரி விண்ணப்பிக்க முடியாது என்று ஒரு மூத்த அரசு அதிகாரி தி இந்து ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர், “மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பு இருந்தாலும் கூட அவர்கள் நீண்ட கால விசா பெற உதவாது. அதற்கு அவர்கள் தகுதி பெற மாட்டார்கள்” என்றார். அதேநேரம் எதனால் இலங்கை அகதிகள் நீண்ட கால சாவுக்குத் தகுதி பெற மாட்டார்கள் என்பது குறித்து அவர் கூடுதல் தகவல் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
உலக செய்திகள்

ஈரானின் முயற்சி பலிக்காது; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

September 10, 2026
வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!
செய்திகள்

வரலாற்றில் பதிவான மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு; விஞ்ஞானிகள் தகவல்!

September 10, 2026
இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி மாயம்; சபையில் நாமல்!

September 10, 2026
காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!
செய்திகள்

காலாவதியான பேக்கரி பொருட்கள் விற்பனை; நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!

September 10, 2026
கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் வறட்சி; கால்நடைகளின் குடிநீருக்காக இரணைமடு குளத்தின் வாய்க்கால் திறப்பு

September 10, 2026
களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!
செய்திகள்

களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!

September 10, 2026
Next Post
கைது அச்சத்தில் அலறும் உதய கம்மன்பில – எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க திட்டம்

கைது அச்சத்தில் அலறும் உதய கம்மன்பில - எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க திட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.