Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கும்-வேலையாட்களுக்கும் தள்ளுமுள்ளு!

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கும்-வேலையாட்களுக்கும் தள்ளுமுள்ளு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கும் சோதையன்கட்டு பகுதியில் ஒப்பந்த வேலையில் ஈடுப்பட்டவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பாலர்சேனை பகுதியில் உள்ள சோதையன் கட்டு பகுதியில் கிரவள் அகழ்வு இடம்பெறுவதாக மக்கள், இராஜாங்க அமைச்சருக்கு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் உள்ளிட்டோர் இன்று பிற்பகல் அப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோர்,சோதையன்கட்டு பகுதியில் கிரவள் அகழ்வு இடம்பெறுவதை அவதானித்துள்ளனர்.

குறித்த பகுதியில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உக்காத கழிவு உள்ளதாகவும் அது உடைப்பெடுத்தால் ஆற்றில் இலக்கும் அபாயம் உள்ளதாகவும் மற்றும் சோதையன் கட்டு எனப்படுவது தமிழர் பாரம்பரிய கட்டாகும் அதை தகர்த்தி கிரவள் அகழ வேண்டாம் எனவும் தெரிவித்து குறித்த வேலையினை உடன் நிறுத்துமாறு கோரியுள்ளனர்.

இருப்பினும் தாம் குறித்த பகுதியில் வன இலாகா திணைக்களம் , புவிச்சரிதவியல் திணைக்கள ஆகியவற்றில் அனுமதி பெற்றுத்தான் குறித்த ஒப்பந்த வேலையினை பெற்றதாகவும் அதிக பணம் செலவழித்துள்ளதாகவும் தெரிவித்து வேலையினை இடைநிறுத்த முடியாது என ஒப்பந்த வேலையில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனுக்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் இடையில் வாய்த்தர்கக்ம் ஏற்பட்டது. இதனை தொலைபேசியில் வீடியோ பதிவி செய்தார் என அவ்விடத்தில் இரு தரப்பிற்கிடையில் முறுகல் நிலை உருவானது.

இதன்போது அங்கு வந்த கரடியனாறு பொலிஸார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த இடத்தில் வைத்தியசாலை கழிவு உள்ளதால் அந்த வேலையை தற்காலிகமாக நிறுத்துமாறும் பொலிஸார் ஒப்பந்தக்காரர்களுக்கு தெரிவித்து அங்கிருந்த கனரக வாகனத்தையும் அகற்றுமாறும் கோரியுள்ளனர்.

பிரதேச செயலாளரின் அனுமதி இல்லாமல் இடம்பெறும் குறித்த வேலை தொடர்பிலும் இதற்கு முன் அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்படும் திணைக்களங்கள் தொடர்பில் கலந்துரையாடி இது தொடர்பான முன்னேற்ற நகர்வை மேற்கொள்வதாக பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த வேலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகப்புத்தகத்தில் பகிரப்பட்ட காணொளி

தொடர்புடையசெய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!
செய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!

July 31, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!

July 31, 2026
சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!
செய்திகள்

சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

July 31, 2026
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!

July 31, 2026
நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!

July 31, 2026
கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு
செய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு

July 31, 2026
Next Post
குழந்தைகளுக்கு தொலைபேசியை கொடுக்கும் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!

குழந்தைகளுக்கு தொலைபேசியை கொடுக்கும் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு