Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் இராச்சியத்தின் கடைசி அடையாளம் மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டும்; அநுர அரசிடம் சிறிதரன் எம்.பி. கோரிக்கை

தமிழ் இராச்சியத்தின் கடைசி அடையாளம் மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டும்; அநுர அரசிடம் சிறிதரன் எம்.பி. கோரிக்கை

10 months ago
in செய்திகள்

தமிழ் இராச்சிய வரலாற்றில் மிகப் பிந்திய அடையாளமாக உள்ள மந்திரிமனை அழிந்து போனால் தமிழர் வரலாறும் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. ஜமுனா ஏரி, மந்திரிமனை சங்கிலியன் முகப்பு என்பன யாழ்ப்பாண மண்ணின் தமிழர் வரலாற்றின் முக்கியத்துவம் மிக்க பகுதிகள் எனவும் அவற்றை தொடர்ந்து பாதுகாக்க அனுர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சுட்டிக்காட்டினார்.

இன்று (18) காலை யாழ் நல்லூர் மந்திரி மனையை தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ்ப்பாண மாவட்டத்தின் உடைய வடக்கு கிழக்கு மக்களுடைய பூர்வீக அடையாளங்களை நிலை நிறுத்துகின்ற மிக முக்கியமாக சங்கிலிய மன்னன் வாழ்ந்த காலத்தில் இருந்த மந்திரிமினை நேற்றைய தினம் மழை காரணமாக ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தது.

அந்த பகுதியை பார்வையிட இன்று(18) காலை வந்திருந்தோம் மிக முக்கியமானதும் மிக கவலையான விடயமும் இந்த மந்திரிமனை என்பது தமிழர்களின் வரலாற்று தொன்மையான இடம். இதனை புணரமைத்து பாதுகாக்கப்பட வேண்டிய பல முயற்சிகள் எடுத்த போதும் ஒரு சில தனி நபர்களின் நீதிமன்ற வழக்குகள் காரணமாக இழுபறி நிலையிலே காணப்பட்டது.

இருந்தாலும் கூட தற்போது அவசர நிலை ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தை மீள அமைத்து இந்த தொல்பொருள் அடையாளத்தை எங்களுடைய பூர்வீக அடையாளமாக நிலை நிறுத்துவதற்குரிய மிக முக்கியத்துவத்தை உணர்த்தி இருக்கின்றது.

தமிழ் இராச்சிய வரலாற்றில் மிகப் பிந்திய அடையாளமாக உள்ள மந்திரிமனை அழிந்து போனால் தமிழர் வரலாறும் அழிக்கப்படும் அபாயம் உள்ளது. ஜமுனா ஏரி, மந்திரிமனை சங்கிலியன் முகப்பு என்பன யாழ்ப்பாண மண்ணின் தமிழர் வரலாற்றின் முக்கியத்துவம் மிக்க பகுதிகள் எனவும் அவற்றை தொடர்ந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

அதன் அடிப்படையில் இன்று யாழ்ப்பாண நல்லூர் பகுதியில் உள்ள மந்திரி மணையை யாழ்ப்பாணம் மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு அதற்குரிய ஆலோசனைகளை பெற்றுள்ளேன்.

இந்த மந்திரமனையை பாதுகாப்பது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ள உள்ளோம் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்
காணொளிகள்

அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்

July 23, 2026
கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!
செய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!

July 23, 2026
வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!
செய்திகள்

வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!

July 23, 2026
Next Post
ஜனாதிபதி, பிரதமர் உட்பட சில முக்கிய அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் வெளியானது

ஜனாதிபதி, பிரதமர் உட்பட சில முக்கிய அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் வெளியானது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு