Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் இல்லை; ஜனாதிபதி அறிவிப்பு

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் இல்லை; ஜனாதிபதி அறிவிப்பு

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரத்தில் வளர்ச்சி இலக்குகளை அடைவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அங்குள்ள இலங்கையர்களைச் சந்தித்து உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, எதிர்காலத்தில் சில வரி விகிதங்களைக் குறைப்பது குறித்து கவனம் செலுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த ஆண்டில் இராஜதந்திர உறவுகளில் சமநிலையை பேணுவதற்கு இலங்கையினால் முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு, தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும் எனவும், இலங்கை வரலாற்றில் எந்த இன மோதல்களும் தலைதூக்காத ஆண்டாகக் கடந்த வருடம் வரலாற்றில் இணைவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, அடுத்த ஆண்டு 3 ட்ரில்லியன் ரூபாய் கடனைப் பெறுவதற்கு எதிர்பார்ப்பதாகவும், அதற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் எந்தவொரு இலங்கையரும் தனிப்பட்ட சலுகைகளை எதிர்பார்த்து தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவரவில்லை என்றும், அவர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் மாற்றத்திற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாகவும், ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
வெளிநாட்டு பணியாளர்களுக்கு விசா சலுகை வழங்க திட்டம்; கனடா பிரதமர்

வெளிநாட்டு பணியாளர்களுக்கு விசா சலுகை வழங்க திட்டம்; கனடா பிரதமர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு