Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் 14 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அப்பப்பாவிற்கு 30 வருட கடூழிய சிறை

மட்டக்களப்பில் 14 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அப்பப்பாவிற்கு 30 வருட கடூழிய சிறை

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதேசம் ஒன்றில் 2015ம் ஆண்டு 14 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அப்பப்பாவிற்கு 30 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 30 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும், பாதிக்கப்பட்ட பேத்திக்கு ஒரு இலட்சம் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் கடந்த 25ம் திகதி வியாழக்கிழமை கட்டளை பிறப்பித்தது தீர்ப்பளித்தார்.

மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய அப்பப்பா 14 வயதுடைய பேத்தியை கடந்த 2015ம் டிசம்பர் மாதத்தில் இருந்து 2016 ஏப்ரல் மாதம் வரையும் உள்ள காலப்பகுதியில் 3 தடவைகள் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு, நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

குறித்த நபர் மீது தண்டனை சட்டக்கோவை 365(2) ம் பிரிவின் கீழ் 16 வயதுக்கு உட்பட்ட பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 3 குற்றச்சாட்டில் வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் சாட்சியங்கள், சான்று பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் குற்றவாளியாக கடந்த செப்டம்பர் 9 ம் திகதி இனம் காணப்பட்டார்.

இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் முன்னிலையில் கடந்த 25 திகதி வியாழக்கிழமை எடுத்துக் கொள்ளப்பட்ட போது முதலாவது குற்றத்துக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்தாவிடில் 3 மாத சிறையில் அடைக்குமாறும், இரண்டாவது குற்றத்திற்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்தாவிடில் 3 மாத சிறையில் அடைக்குமாறும், மூன்றாவது குற்றத்துக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்தாவிடில் 3 மாத சிறையில் அடைக்குமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டு கட்டளை பிறப்பித்தது தீர்ப்பளித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

யாழ் விமான நிலையத்தில் நடராஜர் சிலை வைக்க தடையாக இருக்கும் அமைச்சர் சந்திரசேகர்

June 7, 2026
வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி
செய்திகள்

வீட்டு தகராறில் மனைவியின் தாக்குதலில் கணவன் பலி

June 7, 2026
மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்
செய்திகள்

மட்டக்களப்பின் அபிவிருத்தி தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கையினை மத்திய வங்கியின் ஆளுநரிடம் கையளித்த மட்டக்களப்பு வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள்

June 7, 2026
கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு
செய்திகள்

கல்முனையில் கொடூரம்; 16 வயது சிறுமி காதலனால் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வு

June 7, 2026
பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்
செய்திகள்

பொதுமக்கள் தினத்தில் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாது; பிரதேச செயலாளர்கள் சங்கம்

June 7, 2026
2029ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதியாக வருவார்; அர்ச்சுனா எம்பி ஆருடம்
செய்திகள்

2029ஆம் ஆண்டு நாமல் ஜனாதிபதியாக வருவார்; அர்ச்சுனா எம்பி ஆருடம்

June 7, 2026
Next Post
மட்டு கல்லடியில் இயங்கிவந்த கசிப்பு விற்பனை நிலையம் முற்றுகை

மட்டு கல்லடியில் இயங்கிவந்த கசிப்பு விற்பனை நிலையம் முற்றுகை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு