Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மியன்மார் மத பண்டிகையின்போது அந்நாட்டின் இராணுவம் நடத்திய தாக்குதலில் 24 பேர் உயிரிழப்பு

மியன்மார் மத பண்டிகையின்போது அந்நாட்டின் இராணுவம் நடத்திய தாக்குதலில் 24 பேர் உயிரிழப்பு

11 months ago
in உலக செய்திகள், செய்திகள்

மத்திய மியன்மாரில் திருவிழா நிகழ்வொன்றில் ஆர்ப்பாட்டத்தின் போது பாராகிளைடர் மூலம் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 47 பேர் காயமடைந்துள்ளனர்.

தேசிய விடுமுறை நாளான திங்கட்கிழமை மாலை புத்த மத தாடிங்யுட் திருவிழா நிகழ்வில் பங்கேற்க சாங் யூ நகரத்தில் சுமார் 100 பேர் கூடியிருந்தபோது, மோட்டார் மூலம் இயங்கும் பாராகிளைடர் ஒன்று கூட்டத்தின் மீது இரண்டு குண்டுகளை வீசியதாக இராணுவ ஆட்சிக்கு எதிரான மக்கள் பாதுகாப்புப் படையின் கீழ் உள்ள உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு இராணுவ ஆட்சிக் கொள்கைகளை எதிர்த்து மெழுகுவர்த்தி ஏந்தி நடத்தப்பட்ட போராட்டமாகவும் அமைந்தது.

2021 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பில் மியான்மர் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ளது. இந்த மோதலில் 5,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.

திங்களன்று நடந்த கூட்டத்தின் போது, வான்வழித் தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல் தங்களுக்குக் கிடைத்ததாகவும், தங்கள் போராட்டத்தை விரைவாக முடிக்க முயன்றதாகவும் மக்கள் பாதுகாப்புப் படை அதிகாரி பிபிசி பர்மியரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் பாராமோட்டர்கள் எதிர்பார்த்ததை விட முன்னதாகவே சம்பவ இடத்தை அடைந்தன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!
செய்திகள்

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் இடைக்காலத் தடையுத்தரவு 23ஆம் திகதி வரை நீடிப்பு!

September 9, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
Next Post
குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான விமல் வீரவன்ச

குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையான விமல் வீரவன்ச

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு