Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் அல்லைப்பிட்டியில் மது அருந்தி வாகனம் ஓட்டிய சுகாதார அமைச்சு சாரதி; வெளியான காணொளி

யாழ் அல்லைப்பிட்டியில் மது அருந்தி வாகனம் ஓட்டிய சுகாதார அமைச்சு சாரதி; வெளியான காணொளி

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சுகாதார அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்றின் சாரதி மதுபானம் அருந்திக்கொண்டு வாகனம் செலுத்தும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த குறித்த வாகனத்தின் சாரதியே இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்.

சுகாதார அமைச்சுக்கு சொந்தமான, அவசர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் குறித்த வாகனத்தில் வைத்து, வாகனத்தின் சாரதி மற்றும் மேலுமொருவர் இணைந்து மதுபானம் அருந்தியுள்ளனர்.

இதனை அவதானித்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காணொளி பதிவு செய்துள்ளதுடன், இதுதொடர்பில் குறித்த வாகன சாரதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும், இது நோயாளர் காவு வண்டி அல்ல என்றும், இதனை நீங்கள் ஏன் கேட்கின்றீர்கள் என்றும் காணொளி பதிவு செய்தவரிடம் கடுமையாக கூறிவிட்டு வாகனத்தை எடுத்து பின்னால் செலுத்திச் சென்றுள்ளார்.

குறித்த வாகனத்திற்குள் மதுபான போத்தல்கள் அடையாளம் காணப்பட்டன. அத்துடன் வாகனத்தை செலுத்திய சாரதி மதுபானம் அருந்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சின் முத்திரையுடன், அவசர சுகாதார சேவைகளுக்காக செயற்படும் இதுபோன்ற வாகனங்களின் சாரதிகள் இவ்வாறு போதையில் வாகனம் செலுத்துவது, பணி நேரத்தில் மது அருந்துவது உள்ளிட்டவை பொதுமக்களிடத்தில் அச்சத்தையும் விசனத்தையும் ஏற்படுத்தக்கூடியதாகும்.

மேலும், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்து உரிய தரப்பினர், சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து
செய்திகள்

மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

July 22, 2026
ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்
செய்திகள்

ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்

July 22, 2026
போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!
செய்திகள்

போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!

July 22, 2026
அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்
அரசியல்

அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்

July 22, 2026
அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!
செய்திகள்

அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!

July 22, 2026
கிழக்கு மாகாண சுகாதார தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறமுடியாத நிலை
அரசியல்

கிழக்கு மாகாண சுகாதார தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறமுடியாத நிலை

July 22, 2026
Next Post
பெண்கள் உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க சீனாவை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி

பெண்கள் உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க சீனாவை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு