Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இரண்டு வீடுகளை பயன்படுத்தும் சபாநாயகர்; சாமர சம்பத் மற்றும் சாணக்கியன் சபையில் கேள்வி

இரண்டு வீடுகளை பயன்படுத்தும் சபாநாயகர்; சாமர சம்பத் மற்றும் சாணக்கியன் சபையில் கேள்வி

9 months ago
in அரசியல், செய்திகள்

சபாநாயகருக்கு எதிராகவும் இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இரண்டு வீடுகளை பாவிப்பதாகவும், அதற்குரிய வாடகை பெறுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆகவே சபாநாயகர் அக்கிராசனத்தில் அமரமுடியாது என புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை கடுமையாக சாடினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது, ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்துள்ளேன்.

உங்களுக்கு (சபாநாயகரை நோக்கி) எதிராகவும் இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இரண்டு வீடுகளை பாவிப்பதாகவும், அதற்குரிய வாடகை பெறுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆகவே உங்களுக்கு அக்கிராசனத்தில் அமரமுடியாது. எனது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை பற்றி பேசுவதற்கு இடமளியுங்கள் என்றார்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, இது சிறப்புரிமை மீறல் பிரச்சினையில்லை என்றார்.

சாமர சம்பத் இதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், நீங்கள் (சபாநாயகரை நோக்கி) எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைப்பதற்கு இடமளிப்பதில்லை.

சிறப்புரிமை மீறல் பிரச்சினை முன்வைத்தால் அது பற்றி ஆராய்வதற்கு சிறப்புரிமை மீறல் தொடர்பான குழு உள்ளது. நீங்கள் அவ்வாறு செயற்படுவதாக இருந்தால் நிலையியல் கட்டளையில் இருந்து சிறப்புரிமை மீறல் தொடர்பான குழுவை நீக்குங்கள். உங்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு காணப்படுவதாலா, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைக்க இடமளிக்க மறுக்கின்றீர்கள்.என்று கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன,இதில் எவ்வித ஒழுங்குப்பிரச்சினையும் இல்லை. சாமர சம்பத் முன்வைத்த சிறப்புரிமை மீறல் பிரச்சினையில், அவரது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை முறையாக குறிப்பிடப்படவில்லை. அவற்றை தெளிவாக குறிப்பிட்டு சிறப்புரிமை மீறல் பிரச்சினையை மீண்டும் சமர்ப்பிக்கலாம் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!
செய்திகள்

கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!

July 24, 2026
கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!
செய்திகள்

கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!

July 24, 2026
Next Post
பிரான்சில் இருந்து இலங்கைக்கு துவிச்சக்கர வண்டி பயணம் மேற்கொண்ட யாழ் இளைஞன்

பிரான்சில் இருந்து இலங்கைக்கு துவிச்சக்கர வண்டி பயணம் மேற்கொண்ட யாழ் இளைஞன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு