Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குற்றங்களைத் தடுக்க சாய்ந்தமருது பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

குற்றங்களைத் தடுக்க சாய்ந்தமருது பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் குற்றங்களைத் தடுக்க பின்வரும் அம்சங்களின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதிவாசிகளான உங்களை நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் விடுத்துள்ள விசேட அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல்வேறு நபர்கள் உங்கள் வீட்டையும் உங்கள் சொத்துக்களையும் திருடுவதைத் தடுக்க பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

  1. உங்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பிற வாகனங்களை நிறுத்தும் போது வாகனத்தின் சாவியை உங்களுடன் வைத்திருப்பதை உறுதி செய்து அதை பாதுகாப்பான இடத்தில் நிறுத்துங்கள்.
  2. துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தும் போது அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.
  3. உங்கள் பசுக்கள் மற்றும் பிற கால்நடைகளைப் பாதுகாப்பாக வேலியிட்டு அடைத்து வைக்க நடவடிக்கை எடுக்கவும்.
  4. வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கதவுகள் மற்றும் ஜன்னல்களை பூட்டி சாவியை உங்களுடன் வைத்திருங்கள். அவற்றை ஒரு போதும் பாதுகாப்பற்ற இடங்களில் விட்டுச் செல்ல வோண்டாம்.
  5. தங்கப் பொருட்களை சேமித்து வைக்கும் போதும் கொண்டு செல்லும் போதும் கவனமாக இருங்கள் குறிப்பாக இந்த நாட்களில் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதால், நீங்கள் பாதையில் நடந்து செல்லும் போது சந்தேகத்திற்கு இடமான நபர்கள் உங்களைப் பின் தொடர்கிறார்களா அல்லது உங்களைக் கடந்து செல்கிறார்களா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
  6. சந்தைகள் மற்றும் கண்காட்சிகளில் பொருட்களை வாங்கும் போது நீங்கள் ஏதேனும் தங்க நகைகளை அணிந்திருந்தால் மிகவும் கவனமாக இருங்கள்.
  7. நீங்கள் வசிக்கும் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் யாராவது வந்து சுற்றித் திரிந்தால் அவர்கள் வரும் வாகனங்களின் இலக்க தகட்டு எண்கள் அவர்கள் வரும் திகதிகள் மற்றும் நேரங்களை குறித்துக் கொள்வது அல்லது அந்தச் சந்தர்ப்பங்களை அவர்களுக்குத் தெரியாமல் உங்கள் மொபையில் போனில் வீடியோ எடுப்பது குற்றங்களைத் தடுக்க நீங்கள் வழங்கக் கூடிய ஒரு சிறந்த சேவையாகும்.
  8. பொதுமக்களாகிய உங்களிடம் தொழில் பெற்றுத் தருவதாக அல்லது வெளிநாடுகளுக்கு அனுப்பவதாகக் கூறி சில நபர்கள் உங்களிடம் பணம் வாங்கக் கூடும் அவ்வாறான நபர்களிடம் ஏமாற வோண்டாம்.
  9. ஏதேனும் பாதுகாப்பற்ற சூழ் நிலையை நீங்கள் உணர்ந்தால், அந்தப் பகுதிவாசிகளாகிய உங்களை பின்வரும் தொலைபேசி எண்களில் உடனடியாக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் – தொ.இல: – 067-2221916, சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி – தொ.இல: 071-8592805 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!
உலக செய்திகள்

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!

September 9, 2026
2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்
அரசியல்

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

September 9, 2026
இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!
செய்திகள்

இலங்கையுடன் மூன்று பாதுகாப்பு ஒப்பந்தங்கள்; ராஜ்நாத் சிங் முன்னிலையில் கைச்சாத்து!

September 9, 2026
தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!
செய்திகள்

தலைக்கவசமின்றி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து; ஒருவர் பலி!

September 9, 2026
பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்
செய்திகள்

பொது சுகாதாரத்தில் இலங்கையின் வரலாற்றுச் சாதனைகளுக்கு WHO அங்கீகாரம்

September 9, 2026
Next Post
பதிவு செய்யாமல் இயங்கும் மருந்தகங்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம்; தவறினால் மூட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

பதிவு செய்யாமல் இயங்கும் மருந்தகங்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம்; தவறினால் மூட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.