மட்டக்களப்பு கல்லடியிலிருந்து காலாண்டுச் சஞ்சிகையாக கடந்த 15 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் “தென்றல்” சஞ்சிகையின் “60” ஆவது இதழ் வெளியீடு மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நேற்று சனிக்கிழமை (02) அரங்கேறியது.
“தென்றல்” சஞ்சிகை ஆசிரியர் கதிரேசபிள்ளை கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் எம்.கோபாலரெத்தினம் பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
“தென்றல்” சஞ்சிகை ஆசிரியர் கதிரேசபிள்ளை கிருபாகரனால் “தென்றல்” கொடியேற்றப்பட்டு ஆரம்பமான நிகழ்வில், அகவணக்கம், அகல் விளக்கேற்றல், “தென்றல்” கீதம் இசைத்தல், அதிதிகள் உரை ஆகியன இடம்பெற்றது. இதன்போது “தென்றல்” சஞ்சிகை ஆசிரியர் கதிரேசபிள்ளை கிருபாகரனால் “60” ஆவது இதழின் முதல் பிரதியினை மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி றஞ்சிதமூர்த்திக்கு வழங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் சிறப்பு, கௌரவப் பிரதிகளை “வீசுதென்றல் விருது” பெற்ற கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அதிதிகளால் நாடளாவியில் தெரிவு செய்யப்பட்ட ஆ.மூ.சி.வேலழகன், மூ.அருளம்பலம், செ.குணரத்தினம், கா.சிவலிங்கம், இ.நல்லையா, திருமதி மாலினி அஜந்தன், சீ.கோபாலசிங்கம், திருமதி ஜெகதீஸ்வரி நாதன், மா.திருநாவுக்கரசு, மீரா முகைதீன் ஜமால்தீன், திருமதி இந்திராணி புஸ்பராஜா, பரதன் கந்தசாமி, திருமதி வேதநாயகி குணநாயகம், தி.பத்மநாதன், செ.துரையப்பா, பெ.பேரின்பராசா, த.கோபாலகிருஷ்ணன், வீ.வீரசொக்கன், தம்பி சாகித் சித்தி பரிதா, தி.சத்தியநாதன், மி.அருள்மொழிராஜா, ஏறாவூர் தாஹிர், எஸ்.இரவீந்திரன், முகம்மது லெவ்வை முகம்மது பாறூக், எஸ்.தியாகராஜா, க.ரெட்ணையா, திருமதி சுந்தரமதி வேதநாயகம், வி.பத்மசிறி, ஆத்மராஜா றூத் சந்திரிக்கா, பெ.ஹரிச்சந்திரா, வா.கிருஸ்ணகுமார், சீ.தரணீஸ்வராநந்தா, மா.சசிகுமார், அனோஜா பவளேந்திரன், சி.புரவர்த்தனி, எம். சிவகுமார், ம.புருஷோத்தமன், ச.மதன், த.இன்பராசா, கிறிஸ்தோபர் கிறிஸ்டிராஜ், ஏ.எல்.எம்.சலீம், க.பகீரதன், உ.உதயகாந், கு.கோடீஸ்வரன், தே.லோகவியாசன், க.பாக்கியராஜா, த.மதியழகன், மு.விஸ்வநாதன் மற்றும் வீ.றஞ்சிதமூர்த்தி ஆகியோர் “வீசுதென்றல் விருது” மற்றும் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் விருது பெற்ற கலைஞர் சார்பில் கதிரவன் த.இன்பராசா பாராட்டுரையையும், “தென்றல்” சஞ்சிகை ஆசிரியர்பீட உறூப்பினர் த.செல்வராணி நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்வுகளை சிரேஷ்ட ஊடகவியலாளர் பெ.ஹரிச்சந்திரா தொகுத்து வழங்கினார்.