செவ்வாய் கிரகத்தில் வேற்றுகிரகவாசிகள் அல்லது ஏலியன்கள் வாழ்ந்ததற்கான முக்கியமான ஆதாரங்களை அரை நூற்றாண்டுக்கு முன்பு நாசா தற்செயலாக அழித்துவிட்டது என்று பிரபல ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் தெரிவித்துள்ளனர்.
சுமார் அரை நூற்றாண்டுக்கு முன்பு நாசா தமது வைக்கிங் லேண்டர்களை செவ்வாய் கிரகத்தில் அனுப்பிய நிலையில், ஏலியன்கள் தொடர்பில் ஆதாரங்களை திரட்டி இருக்கலாம் எனவும், ஆனால் தவறுதலாக மொத்த தரவுகளையும் அழித்துள்ளதாக கூறுகின்றனர்.
மேலும், 1970 களில் முன்னெடுக்கப்பட்ட மண்ணில் தண்ணீரை அறிமுகப்படுத்தும் சோதனை என்பது செவ்வாய் நிலப்பரப்பில் மறைந்திருக்கும் எந்த உயிரினத்தையும் அழித்தது என்றே ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
வைக்கிங் லேண்டர்ஸ் தீவிரமாக முன்னெடுத்த சோதனையில் செவ்வாய் நிலப்பரப்பில் கரிமப் பொருட்களின் எந்த அறிகுறியும் கண்டறியப்படவில்லை. நாசாவின் வைக்கிங் திட்டத்தின் படி 1976 ஜூலை 20ம் திகதி முதலாம் வைக்கிங் செவ்வாய் நிலப்பரப்பில் இறங்கியது, அதே ஆண்டு செப்டம்பர் 3ம் திகதி இரண்டாவது வைக்கிங் தரையிறங்கியது.
பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்ட இந்த லேண்டர்கள் செவ்வாய் நிலப்பரப்பில் உயிரின் அறிகுறிகளைத் தேடுவதற்கும், மண் மற்றும் சுற்றுச்சூழலின் தன்மை மற்றும் காந்த அம்சங்களை ஆய்வு செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டது.
இதில், செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருந்தால், பாக்டீரியாக்கள் ஊட்டச்சத்துக்களை சாப்பிட்டு கதிரியக்க கார்பனை வாயுவாக வெளியேற்றும் என கண்டறியப்பட்டது. அத்துடன் செவ்வாய் கிரகத்தில் பூர்வீக கரிம மூலக்கூறுகள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளன, ஆனால் குளோரினேட்டட் வடிவத்தில் அவை உள்ளன.
வைக்கிங் லேண்டர்கள் திரட்டிய தரவுகள் அனைத்தும் செவ்வாய் நிலப்பரப்பில் உயிர்கள் காணப்படுவதை உறுதி செய்ததாகவே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 1982ல் கடைசியாக வைக்கிங் லேண்டரில் இருந்து பூமிக்கு தகவல் வந்துள்ளது.
அதன் பின்னரும் இரு வைக்கிங் லேண்டர்களும் செவ்வாய் நிலப்பரப்பில் ஆய்வுகளை தொடர்வதாகவே கூறப்படுகிறது. வைக்கிங் லேண்டர்கள் அனுப்பிய தரவுகளின் அடிப்படையிலேயே செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.