Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

9 months ago
in மட்டு செய்திகள்

உலகநாடுகளில் உள்ள அனைவரையும் இணைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை வழங்க வேண்டும் எனும் உயரிய நோக்கத்தை கொண்ட சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் புதிய தலைவராக பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை பொறுப்பேற்றுள்ளார்.

இன்று (06) சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்வில் அவர் தனது பதவியைப் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் கைதடி மண்ணின் மைந்தனும், புனித பரியோவான் கல்லூரியின் பழைய மாணவரும் மருத்துவ உலகில் நன்கு அறியப்பட்டவருமான தவம் தம்பிப்பிள்ளை தற்போது அமெரிக்காவின் சான்போர்ட் மருத்துவமனையில் உறுப்பு மாற்று சத்திரசிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார்.

அடிக்கடி இலங்கைக்கு வருகை தந்து பல்வேறு சுகாதார நலத்திட்டங்களுக்கு உதவி செய்து வருவதோடு, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) சிறுநீரக மாற்று சிகிச்சை திட்டம் ஆரம்பிக்க காரணமான முக்கிய நபராக விளங்குகிறார்.

அமெரிக்க மருத்துவ உதவி நிதியத்தின் (IMHO) உறுப்பினராக கடந்த 20 ஆண்டுகளாக இலங்கையில் பல தொண்டுப்பணிகளில் ஈடுபட்டு பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்.

IMHO இலங்கையில் பல்வேறு சுகாதார, கல்வி மற்றும் வலுவிழந்தவர்களுக்கு பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் திட்டங்களை செயற்படுத்தி வருகிறது.

பேராசிரியர் தவம் தம்பிப்பிள்ளை சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் அமையத்தின் (International College of Surgeons) உலக அமைப்பின் தலைவராக அறிமுகப்படுத்தப்பட்டதை காண்பது பெருமையும் மகிழ்ச்சியும் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!
செய்திகள்

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!

August 18, 2026
மட்டு மாநகர சபை வழங்கிய நியமனங்கள் தொடர்பில் ஈ.பி.டி.பி முறைப்பாடு
காணொளிகள்

மட்டு மாநகர சபை வழங்கிய நியமனங்கள் தொடர்பில் ஈ.பி.டி.பி முறைப்பாடு

August 17, 2026
அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்; ஹிஸ்புல்லாவிற்கு எதிராக உடனடி விசாரணை நடத்த வேண்டும்’ . ஈரோஸ் பிரபா
காணொளிகள்

அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்; ஹிஸ்புல்லாவிற்கு எதிராக உடனடி விசாரணை நடத்த வேண்டும்’ . ஈரோஸ் பிரபா

August 17, 2026
பாசிக்குடா கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது!
செய்திகள்

பாசிக்குடா கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது!

August 17, 2026
மது ஒழிப்பை வலியுறுத்தி வாகரையில் இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு!
செய்திகள்

மது ஒழிப்பை வலியுறுத்தி வாகரையில் இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு!

August 14, 2026
செஞ்சோலை மாணவிகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!
செய்திகள்

செஞ்சோலை மாணவிகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

August 14, 2026
Next Post
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் நிவாரண பணி முன்னெடுப்பு

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தினால் நிவாரண பணி முன்னெடுப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு