மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் தொடர்பாக பொதுமக்கள்,முகப்புத்தகம் வாயிலாகவும் சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் கடந்த மாதம் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இம்மாதம் 03 ஆம் திகதி தேரோட்டத்துடன் நிறைவு பெற்றிருந்தது.
இத்தேரோட்டம் தொடர்பில் வெளியாகியிருந்த புகைப்படங்ளில் பக்த அடியார்களால் தேர் இழுக்கப்படும் போது தேரில் கடவுளின் சிலை பொதுமக்களுக்கு தெரியாத அளவுக்கு இளைஞர்கள் குழு ஒன்று தேரில் அமர்ந்திருந்தனர்.
சாதாரணமாக ஒரு தேர் இழுக்கப்படும் போது தலைமை குரு ஒருவரும், அவருக்கு உதவியாக இன்னொரு குருவும் இருப்பது காலம் காலமாக அனைத்து கோவில்களிலும் இருந்து வரும் நடைமுறையாகும், அப்படி இல்லாவிடினும் இரண்டு தலைமை குருக்கள் தேரில் வலம் வந்து கடவுளுக்கு பூஜை, நமஸ்காரங்கள் செய்வார்கள் ஆனால் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயதில் நடைபெற்ற அந்த விடயம் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருவது மட்டுமல்லாமல் சில பொதுமக்கள் தேரில் இவர்கள் இருக்க வேண்டி எந்த அவசியமும் இல்லை, யார் இவர்கள் ஆலய பூசகரா இல்லை 60 வயதுக்கு மேற்பட்டு தீட்சை பெற்று இறைதொண்டு செய்யும் சிவதொண்டனா இல்லை சிவஞானியா இல்லை சிவசித்தனா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதேசமயம் என்றும் இல்லாமல் இம்முறை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயதில் ஐந்து முறை தேர் இழுக்கும் கயிறு அருந்துள்ளது என்பதும் பிணைப்பு திரும்ப திரும்ப அறுந்த கயிறை மீள மீள பிணைத்து தேரோட்டம் நடைபெற்று முடிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.