காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியிலிருந்து 2021, 2022ம் ஆண்டுகளில் தேசிய சர்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் இஸ்லாமிய உயர் கற்கை நெறிகளுக்கு தெரிவான மௌலவிமார்கள் கௌரவிக்கப்பட்டனர்.இக்கௌரவிப்பு விழா (19) காத்தான்குடி மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக் கல்லூரி நிருவாகசபை தலைவர் அஷ்ஷெய்க் ஏ.பி. அலியார் ரியாதி தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில், தென்கிழக்கு பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் ஓய்வு நிலை பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம். ஜலால்தீன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இதில் மட்டக்களப்பு கல்லடி இராணுவ முகாம் பிரிகேடியர் என். ஏ.திலூம பண்டார, மட்டக்களப்பு
உதவி பொலிஸ்,துலிப் லியனிக, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி, மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.அமீர், காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய ஸ்ரீதர் காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.
எம்.கலவுதீன் உட்பட உலமாக்கள் பிரமுகர்கள் அதிகாரிகள் கல்வியலாளர்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியில் கல்வி கற்று 2021, 2022ம் ஆண்டுகளில் தேசிய சர்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் இஸ்லாமிய உயர் கற்கை நெறிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மௌலவி பலாஹீன்கள் 17 பேர் கௌரவிக்கப்பட்டனர். இவர்களுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.