மிகவும் எதிர்பார்த்த, எதிர்பார்க்கப்பட்ட கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவான bard அறிமுகமாகி விட்டது. ஏற்கனவே, கடந்த ஆண்டு மைக்ரோசாஃப்டின் செயற்கை நுண்ணறிவான chatgptக்கு போட்டியாக பார்ட் செயல்படும் என்று பரவலாக கூறப்பட்டு வந்த நிலையில், இந்த இரண்டு ai கருவிகள் மட்டுமில்லாமல் சந்தையில் பலவித ai க்களும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு கருவிகளால் பல்வேறு வேலைகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பது ஒருபக்கம் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. மற்றொரு பக்கம் செயற்கை நுண்ணறிவு கருவிகள் பல விதங்களில் உதவியாக இருக்கும், தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்துக்கு மிக சுலபமாக எடுத்துச் செல்லும் என்றும் கூறப்படுகிறது. செயற்கை நுண்ணறிவை எப்படியெல்லாம் நமக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்பது பற்றி பல ஆய்வுகளும் பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கூகுள் நிறுவனம், இந்தியா மற்றும் ஜப்பானில் கூகிளின் பிரசித்தி பெற்ற கூகுள் தேடு பொறியில் அதாவது Google Searchஇல் ஜெனரேட்டிவ் ai என்பதை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது என்ன, இது எவ்வாறு செயல்படும் என்பதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் கடந்த புதன்கிழமை தனது கூகிள் தேடுபொறியில், இந்தியா மற்றும் ஜப்பான் யூசர்களுக்காக ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவை அறிமுகம் செய்ய இருப்பதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. சாதாரணமாக ஒரு விஷயத்தை கூகுள் தேடுவதற்கும், ai சேர்க்கப்பட்ட தேடலுக்கும் கிடைக்கும் முடிவுகள் வேராக இருக்கும். ஜெனரேட்டிவ் ai தேடல்கள், யூசரின் தேடலுக்கு, லிங்க்குகளை மட்டும் தேடல் முடிவுகளாகக் காட்டாமல், டெக்ஸ்ட், புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் உள்ளிட்ட விஷுவல் முடிவுகளாக மற்றும் அதற்கான சம்மரிகளுடன் வெளியாகும்.
இந்த அம்சம் முதன் முதலாக அமெரிக்காவில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது மேலும் இரண்டு நாடுகளில் அறிமுகமாக இருக்கிறது. யூசர்கள் இதைப் பயன்படுத்தலாமா வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளலாம்.
இந்த அம்சம் அறிமுகம் அறிமுகமான பின்பு ஜப்பானில் தங்களுடைய உள்ளூர் மொழிகளில் இதை பயன்படுத்தலாம். இந்தியாவைப் பொறுத்தவரை பல மொழிகள் பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது ஆங்கிலம் மற்றும் இந்தியில் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.
கூகுள் சர்ச் என்பதே நமக்கு தேவையான தகவல்களை தேடுவதற்காக அல்லது ஏதேனும் விஷயத்தை வாங்குவதற்கு, ஒரு இடம் எங்கிருக்கிறது என்பதை லொக்கேட் செய்வதற்கு உள்ளிட்ட தேடுதல் சார்ந்த விஷயங்களுக்காகவே பயன்படுத்தப்பட்டு வந்தது. செயற்கை நுண்ணறிவு பரவலாக chatbotகளாக அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில், கூகுள் தேடலும் சாட்பாட்டும் வெவ்வேறானவை. தற்போது இரண்டும் இணைந்து செயல்பட இருக்கிறது.
கூகுள் ai இணைக்கப்பட்ட சர்ச் இன்ஜின், இப்போது மைக்ரோஃசாப்ட் ai இணைக்கப்பட்ட bing இன்ஜினுக்கு போட்டியாகக் களம் இறங்குகிறது.