மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (06) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அத்துடன், மத்திய மலைநாட்டின் மேற்கு மலைச்சரிவுகளிலும் வடமேல், வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் கடும் காற்று வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிலவும் மழையுடனான வானிலையால் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நேற்று(05) மாலை மீண்டும் நீடிக்கப்பட்டது.
இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய மற்றும் புளத்சிங்கள பிரதேச செயலாளர் பிரிவுகள், கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல பிரதேச செயலாளர் பிரிவு, இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொட, குருவிட்டை மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுகள், காலி மாவட்டத்தின் பத்தேகம, நாகொட மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகள், கண்டி மாவட்டத்தின் உடபலாத பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.