ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண போட்டி விற்பனைக்காக 4 லட்சம் டிக்கெட்டுகளை வெளியிடுகிறது பிசிசிஐ.
10 நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் உலகக் கிண்ண போட்டி இந்தியாவில் அக்டோபா், நவம்பா் மாதங்களில் நடைபெறுகிறது. பொதுவாக கிரிக்கெட் போட்டி என்றால் மைதானம் முழுவதும் நிரம்பி விடும் நிலை உள்ளது.
இதனால் டிக்கெட்டுகளுக்கு நிலவும் அதிக தேவையைக் கருத்தில் கொண்டு பிசிசிஐ 4 லட்சம் டிக்கெட்டுகளை வெளியிட உள்ளது. எவ்வளவு ரசிகா்களை இடம்பெறச் செய்ய முடியுமோ அவ்வளவு ரசிகா்களுக்கு டிக்கெட்டுகளை விற்க திட்டமிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஆா்வலா்கள் இதன்மூலம் தங்களுக்கான இடங்களைப்பதிவு செய்யலாம்.
செப். 8 முதல் (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு டிக்கெட்டுகள் விற்பனை தொடங்குகிறது. ரசிகா்கள், அதிகாரபூா்வ இணையத்தில் டிக்கெட்டுகளை வாங்கலாம். மேலும் டிக்கெட்டுகள் விற்பனை தொடா்பாக ரசிகா்களுக்கு தெரிவிக்கப்படும் என பிசிசிஐ செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.