Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி திட்டம்; மொட்டுக் கட்சியில் பலருக்கு வாய்ப்பு!

புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி திட்டம்; மொட்டுக் கட்சியில் பலருக்கு வாய்ப்பு!

3 years ago
in முக்கிய செய்திகள்

சர்வதேச நாணய நிதியக் கடன் தொகையின் முதல் தவணைக் கொடுப்பனவு கிடைத்துள்ள நிலையில், புதிய அமைச்சரவையை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார் என்று அரச வட்டாரம் தெரிவிக்கின்றது.

இதில் பல மாதங்களாக இழுபறியில் இருந்து வரும் 10 புதிய அமைச்சர்களின் நியமனமும் அடங்கும் எனத் தெரியவருகின்றது.

அமைச்சரவையில் தமது தரப்பைச் சேர்ந்த மேலும் 10 பேரைச் சேர்க்க வேண்டும் என்பது மொட்டுக் கட்சியின் கோரிக்கையாகும். புதிய அமைச்சரவை மாற்றம் என்பது பல மாதங்களாகப் பேசப்பட்டு வருகின்றது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையில் புதிய அமைச்சரவையை நியமித்தால் மக்கள் அதிருப்தியடைவார்கள் என்பதால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதை இழுத்தடித்தே வந்திருந்தார். பொருத்தமான தருணம் வரும் போதே அந்த நியமனத்தைச் செய்வதென்பது ஜனாதிபதியின் திட்டம்.

ஆனால், மொட்டுத் தரப்பு அமைச்சரவையில் தமது அணியைச் சேர்ந்த மேலும் 10 பேரை நியமிக்குமாறு தொடர்ச்சியாக ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. இதோ நியமிக்கின்றேன், அதோ நியமிக்கின்றேன் என்று கூறி ஜனாதிபதி இழுத்தடித்தார்.

இறுதியாக 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் முடிவடைந்ததும் புதிய அமைச்சரவையை நியமிக்கின்றேன் என்று கூறி மொட்டுக் கட்சியினரை ஜனாதிபதி ஆறுதல்படுத்தினார்.

இறுதியில் அதுவும் நடக்கவில்லை. இதனால் மொட்டு எம்.பிக்கள் ஜனாதிபதி மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைத்த பின் புதிய அமைச்சரவை நியமிப்பதுதான் பொருத்தமானது என்று ஜனாதிபதி கருதினார்.

அதன் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியக் கடன் தொகையின் முதல் தவணை கொடுப்பனவு தற்போது கிடைத்துள்ள நிலையில், புதிய அமைச்சரவையை நியமனத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தேசித்துள்ளார் என அரசியல் வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
இலங்கையில் ஜூன் முதல் நடைமுறைக்கு வரும் தடை!

இலங்கையில் ஜூன் முதல் நடைமுறைக்கு வரும் தடை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு