ஐ.சி.சி 2025-2029 மகளிர் உலகக் கிண்ண செம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக, இலங்கை மகளிர் அணியுடன் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் இருபது 20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி நேற்று (20) இரவு இலங்கையை வந்தடைந்துள்ளது.
டுபாயில் இருந்து பயணித்த பாகிஸ்தான் மகளிர் அணி, இரவு 10 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் 23, 25 மற்றும் 28ஆம் திகதிகளில் ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபது20 தொடர் எதிர்வரும் 31ஆம் திகதி, அடுத்த மாதம் 2ஆம் திகதி மற்றும் 4ஆம் திகதிகளில் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த தொடர்களுக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








