இலங்கை தபால் திணைக்களத்தினை ஒத்த போலி இணையத்தளத்தை பயன்படுத்தி பண மோசடி நிகழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இணையத்தள முறைகேடுகள் தொடர்பாக தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் பற்றி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை ஒத்தவாறு ஒரு இணையத்தளத்தினை உருவாக்கி, அதிலிருந்து பொதுமக்களிடம் கடன் அட்டைகள், குறித்த தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலமாக எந்தவொரு பரிவர்தனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் அதற்கான வசதிகளை குறித்த இணையத்தளம் கொண்டிருக்கவில்லை எனவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, போலியான ஏமாற்றுக்காரர்களின் மோசடியில் சிக்கிக்கொள்ளாமல் அவதானமாக இருக்கும் படி தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.சத்குமார தெரிவித்துள்ளார்.
இவை மாத்திரமல்லாமல், தபால் திணைக்களத்தின் இணையத்தள முகவரியும் முறைகேடான முறையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக தபால்மா அதிபர் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.