ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை மற்றும் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று (11) மத்திய குழு ஒன்று கூடவுள்ளது.
கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டதையடுத்து, கட்சியில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளதோடு, இது தொடர்பான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தொகுதிகள் மற்றும் மாவட்ட சபைகளை வலுப்படுத்தும் வகையில் அடிமட்ட மட்டத்தில் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், இன்று நடைபெறும் மத்திய குழுவில் இது குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது.