மட்டக்களப்பு பல்கலைகழகத்தில் இருந்து கணினிகள்மற்றும் மின் குமிழ்களைத் திருடிச் சென்ற 2 இராணுவ
சிப்பாய்கள் உட்பட 3 பேரை வெலிகந்தை வீதி சோதனைச்சாவடியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலையில் கைது செய்துள்ளதாகவும் இவர்களிடமிருந்து 5 கணினிகள் 80 மின்விளக்குகள் என்பவற்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள, முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரின் மட்டக்களப்பு பல்கலைக்கழகம், 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் இராணுவம் பெறுப்பேற்று,
பாதுகாப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.கடந்த காலத்தில் கொரோனா சிகிச்சை மத்திய நிலையமாக அதனை மாற்றியற்பட்டு வந்ததுடன் இது இராணுவ பாதுகாப்பில்
இருந்துவருகின்றது.
இந்த நிலையில் குறித்த பல்கலைக்கழகத்தில் கடமையாற்றி வந்த இரு இராணுவத்தினர் கடமை
நேரத்தில் அங்கிருந்த 5 கணினிகள் மற்றும் 80 மின்குமிழ்களை திருடி அவற்றை பொதிசெய்து வைத்துள்ளனர்.விடுமுறையில் செல்லும் தினமான ஞாயிறு அதிகாலை, பொதியை ஏற்றிக்கெண்டு பயணிப்பதை அவதானித்த பொலிஸார் குறித்த ஓட்டோவை சோதனையிட்டபோது திருடிக்செல்வதை கண்டுபிடித்ததுடன், இரு இராணுவச் சிப்பாய்கள் ஓட்டோ சாரதி உட்பட 3 பேரை கைது செய்தனர்.
இந்தப் பல்கலைக்கழகத்தை இராணுவம் பெறுப்பேற்ற பின்னர் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான
இலத்திரனியல் பொருட்கள் திருட்டுப்போயுள்ளதாக பல்கலைகழக முகாமையாளர்
பொலிஸ் நிலையத்தில் 5 முறைப்பாடுகள் செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.