Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் திட்டம்: பின்வாங்கினார் கனேடிய அமைச்சர்!

வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் திட்டம்: பின்வாங்கினார் கனேடிய அமைச்சர்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கனடாவில் வீடு பற்றாக்குறைக்கு வெளிநாட்டு மாணவர்களும் ஒரு காரணம் என்றும், ஆகவே, கனடாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவேண்டும் என்றும் கூறிய கனடா அமைச்சர் ஒருவர் அந்தர் பல்டி அடித்துள்ளார்.

கனடாவில் சுமார் 800,000 சர்வதேச மாணவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஆக, அவர்களால் வீடு தட்டுப்பாடு நிலவுவதாக ஒரு கருத்து நிலவுகிறது.

சமீபத்திய தேர்தலில், ஆளும் ட்ரூடோவின் கட்சி பின்தங்கியதற்கு, வீடுகள் பற்றாக்குறை ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆகவே, அதை சமாளிக்க அரசு திட்டமிட்டுவரும் நிலையில், கடந்த மாதம் வரை புலம்பெயர்தல் அமைச்சராக இருந்த Sean Fraser தற்போது உள்கட்டமைப்புத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வீடுகள் பற்றாக்குறையை எதிர்கொள்ள திட்டமிட்டுவருகிறார் அவர். கனடாவில் நிலவும் வீடு பற்றாக்குறை பிரச்சினையை எதிர்கொள்வதற்காக சர்வதேச மாணவர்களின் என்ணிக்கையைக் கட்டுப்படுத்தப்போவதாக அறிவித்திருந்தார்.

ஆனால், நிதர்சனம் என்னவென்றால், கனடா மட்டுமல்ல, ஜேர்மனி முதலான பல நாடுகளின் பொருளாதாரத்தை உயர்த்த, வெளிநாட்டவர்கள் தேவைப்படுகிறார்கள். அதுவும் கோவிட் காலகட்டத்துக்குப் பிறகு பல்வேறு துறைகளில் பணியாளர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.

உலகமெங்கும், பல நாடுகளில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பணி ஓய்வு பெறுகிறார்கள் பலர். ஆனால், அவர்கள் விட்டுச் சென்ற இடத்தை நிரப்புவதற்கு தகுதிபடைத்த இளைஞர்கள் இல்லை.

ஆக, பல நாடுகள் பணியிடங்களில் நிலவும் காலியிடங்களை நிரப்ப திணறிவருகின்றன. கனடாவும் அப்படித்தான்.

Sean Fraser முன்பு புலம்பெயர்தல் அமைச்சராக இருந்தார். அப்போதெல்லாம், கனடாவுக்கு புலம்பெயர்வோரை வரவேற்பது குறித்தே பெருமையாக பேசிக்கொண்டிருந்தார்.

சர்வதேச மாணவர்கள் கனடாவுக்குத் தேவை என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த Sean Fraser தற்போது உள்கட்டமைப்புத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதற்குப் பின் அவரது பேச்சே மாறிவிட்டது.

கனடாவில் வீடு பற்றாக்குறைக்கு வெளிநாட்டு மாணவர்களும் ஒரு காரணம் என்றும், ஆகவே, கனடாவுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவேண்டும் என்றும் சமீபத்தில் கூறியிருந்தார் அவர். ஆனால், தற்போது அப்படியே அந்தர் பல்டி அடித்து, கனடாவுக்கு வெளிநாட்டு மாணவர்கள் அவசியம் என்று மீண்டும் கூறியுள்ளார் Sean Fraser.அமைச்சரின் திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை!

தொடர்புடையசெய்திகள்

தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!
செய்திகள்

தனியார் தொழிலகத்தில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

June 9, 2026
ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
செய்திகள்

ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

June 9, 2026
புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!
செய்திகள்

புனரமைக்க முடியாத மலையக வீடுகளுக்கு ரூ.50 இலட்சம்; அரசின் புதிய தீர்மானம்!

June 9, 2026
30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

30 ஆண்டு சட்டப் போராட்டத்தில் தாய்க்கு வெற்றி; வீட்டின் உரிமை தாய்க்கே என நீதிமன்றம் தீர்ப்பு

June 9, 2026
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால
செய்திகள்

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை; ஆனந்த விஜேபால

June 9, 2026
வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!
செய்திகள்

வலுவடையும் டொலரின் மதிப்பு; ரூ. 342 ஐ தாண்டிய விற்பனை விலை!

June 9, 2026
Next Post
மணிரத்தினத்துடன் இணையப்போகும் கமல்-ஜெயம் ரவி!

மணிரத்தினத்துடன் இணையப்போகும் கமல்-ஜெயம் ரவி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு