தேர்தல் செலவுகள் தொடர்பான சட்டமூலத்தின்படி தேர்தல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசத்தை 21 நாட்களில் இருந்து 42 நாட்களாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குடியியல் வழக்கு நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைக்கான திருத்தம் மற்றும் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பில் நீதி மற்றும் சட்டம் மீதான துறைசார் மேற்பார்வை குழுவில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேர்தல் சட்டமூலங்களால் நிர்ணயிக்கப்பட்ட அபராதத் தொகை போதுமானதாக இல்லாததால், தற்போதைய நிலைமைக்கு உரியவாறு அபராதத் தொகையை புதுப்பிக்கவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.