‘அரகலய’ போராட்ட காலத்தில் 13ஆவது திருத்தத்துக்கும் அப்பாற்சென்று 13 பிளஸைக்கூட வழங்கியிருக்கலாம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தப் பிரச்சினை தொடர்பில் நான் பேச வேண்டும். எனது வாழ்வில் இந்தப் பிரச் சினைக்காகப் பெரியளவில் அர்ப்பணித்துள்ளேன். இந்த விடயம் தொடர்பில் என்னைக் கொலைசெய்தும் இருப்பார்கள்.
அரசமைப்பின் சட்டமாகக் காணப்படும் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறே தற்போது ஜனநாயக முறையில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தலைவர்கள் கோருகிறார்கள். இருப்பினும் இதனைச் சிலர் ஒருபுறம் தள்ளி வைத்துள்ளனர். அதனை ஏன் செயற்படுத்தமுடியாது 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் சில விடயங்கள் உள்ளன. அதனை நடைமுறைப்படுத்த விரும்புவதாக ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் என்னிடமும் கேட்டுக்கொண்டார்.
அதற்கு எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு நான் தயார். ஆனால், அதற்கு வடக்கு – கிழக்கில் மாகாணசபைகள் இருக்கவேண்டும். அது அவசியம் ஜனாதிபதியாக நான் பொறுப்பேற்ற காலத்தில் புதிய அரசமைப்பைக் கொண் டுவர நடவடிக்கை எடுத்தேன். இனப்பிரச் சினைக்காக முன்வைக்கப்பட்ட முக்கியமான தீர்வாக அது இருந்தது. உலகம் அதை ஏற்றுக்கொண்டது.
ஆனால் அதை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்னிடம் இல்லை. ஏழு வாக்குகளே இதற்குப் போதாமல் இருந்தது. அந்த ஆதரவை அன்று ஐக்கிய தேசியக் கட்சி தரவில்லை. ஐக்கிதேசியக் கட்சியுடன் 5 மாதங்கள் கலந்துரையாடிக் கொண்டுவந்த அரசமைப்பு வரைவை ஐக்கிய தேசியக் கட்சி விதண்டாவாதமாக எதிர்த்தது. அது மாத்திரமல்ல எனக்கு எதிராகக் கூச்சலிட்டு, அதனைத் தீயிட்டுக் கொளுத்தினர். தற்போதாவது அதனை நிறைவேற்றவேண்டும் என அவர் கூறுகிறார்.
அது மிகப்பெரிய விடயமல்லவா? ‘அரகலய’ போராட்டக் காலத்தில் 13க்கும் அப்பால் சென்றும் தீர்மானங்களை எடுத்திருக்கலாம். நானாக இருந்திருந் தால் அதைச் செய்திருப்பேன். தற்போது 13ஐ நடைமுறைப்படுத்தவேண்டிய உண்மையான தேவை ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளது. இது தொடர்பில் சிறந்த புரிந்துணர்வும் அவருக்கு உள்ளது என சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.