Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலஞ்சம் பெற்ற இராணுவ வீரர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

இலஞ்சம் பெற்ற இராணுவ வீரர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அனுராதபுரம் – பண்டுலகம இராணுவ முகாமில் பணியாற்றும் லான்ஸ் கோப்ரல் தர இராணுவ வீரர் ஒருவர், ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவரிடம் 129,600 ரூபா பணத்தை இலஞ்சமாக கோரிப் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கடந்த 30 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே மேற்படு சந்தேகநபரான இராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

திசாநாயக்க முதியன்சேலாகே சஜித் சமீர திசாநாயக்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஓய்வுபெற்ற இராணுவ வீரரான முறைப்பாட்டாளர் பெற்றுக்கொண்ட கடனைத் தீர்க்க உதவுவதாகக் கூறி, அவரிடமிருந்து கடன் விபரங்களைப் பெற்றுக்கொண்ட சந்தேகநபர், 25 இலட்சம் ரூபா நிதியுதவியைப் பெற்றுத் தருவதாகப் வாக்குறுதியளித்துள்ளார்.

இதற்காக மூன்று சந்தர்ப்பங்களில் 129,600 ரூபாவை இலஞ்சமாக மக்கள் வங்கி கணக்கொன்றில் வைப்புச் செய்யுமாறு கோரி அதனைப் பெற்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, ஆவணக் கட்டணம் எனக் கூறி மேலும் 13,457 ரூபாவை அதே கணக்கில் வைப்புச் செய்யுமாறு கோரிய போதே, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். இது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalsrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்
செய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

September 8, 2026
பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!
செய்திகள்

பேத்தாழை விபுலானந்தா கல்லூரி பழைய மாணவர் விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக நிறைவு!

September 8, 2026
கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!
செய்திகள்

கந்தளாயில் லொறி மீது மின் கம்பம் முறிந்து விழுந்து விபத்து!

September 8, 2026
தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!
செய்திகள்

தாய்லாந்து விசா அற்ற அனுமதி ரத்து; காரணம் இலங்கையர்களின் சட்டவிரோத செயல்கள்: அமைச்சர் விஜித ஹேரத்!

September 8, 2026
செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!
செய்திகள்

செவிப்புலன் வலுவிழந்தோருக்கு புதிய 119 சேவை – வாட்ஸ்அப் வீடியோ மூலம் முறைப்பாடு சமர்ப்பிக்கலாம்!

September 8, 2026
பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை
செய்திகள்

பேருந்து, வேன் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களுக்கு புதிய கட்டாயச் சோதனை; 3 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை

September 8, 2026
Next Post
2.5 மில்லியன் டொலர் விவகார விசாரணைக்காக இலங்கையுடன் இணைகிறது அமெரிக்கா

2.5 மில்லியன் டொலர் விவகார விசாரணைக்காக இலங்கையுடன் இணைகிறது அமெரிக்கா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு