கல்விக் காலத்தை ஓராண்டு குறைக்க பேச்சு நடந்து வருகிறது. அதனை செய்ய முடியுமாக இருந்தால், எமது பிள்ளைகள் ஒரு வரு டம் முன்னதாகவே பட்டப்படிப்பை நோக்கி செல்ல முடியும். மேலும், பல்வேறு துறைகளுக்கு செல்ல முடியும். அந்தச் சவாலை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
விசாகா கல்லூரியில் இடம் பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.ஒரு கல்லூரியை விட்டு வெளியேறி, உலகளாவிய அறிவை அணுகுவதற்கான மையமாக இருக்கும் பல்கலைக்கழகத்துக்கு செல்கிறோம், இதன் மூலம் நாட்டுக்கு பல நன்மைகளை சேர்க்கிறோம். அதனால்தான் பாடசாலைக்கும் பல்கலைக்கழகத்துக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது.
எங்களைப் போலவே, பெற்றோர்களும் பாடசாலைக்குச் செல்லும் பிள்ளைகளும் உரிய நேரத்தில் பரீட்சைகள் நடத்தப்பட வேண்டும் உரிய நேரத்தில் பெறு பேறுகளைப் பெற வேண்டும், உயர்கல்விக்கான கதவுகள் சரியான நேரத்தில் திறக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த கால சட்டகத்தை உறுதியுடன் செயல்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. இது அவசியமானது.கல்விக் காலத்தை ஓராண்டு குறைக்க பேச்சு நடந்து வருகிறது. அதனை செய்ய முடியுமாக இருந்தால், எமது பிள்ளைகள் ஒரு வருடம் முன்னதாகவே பட்டப்படிப்பை நோக்கி செல்ல முடியும். மேலும், பல்வேறு துறைகளுக்கு செல்ல முடியும். அந்தச் சவாலை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என பிரதமர் தெரிவித்தார்.
பரீட்சைகள் ஆணையாளர் எச். ஜே. எம். சி. ஜயசுந்தர, அதிபர் மனோமி செனவிரத்ன, ஆசிரி யர்கள் தற்போதைய மற்றும் பழைய மாணவிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.